• November 1, 2024

சிவனுக்கு படைக்கக்கூடாத பொருட்கள்

 சிவனுக்கு படைக்கக்கூடாத பொருட்கள்

தாழம்பூ

ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற சண்டை எழுந்தபோது, சிவன் ஜோதிலிங்கமாய் தோன்றி, தன்னுடைய முதலான தலையை அல்லது முடிவான காலை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று சொல்கிறார். அதன்படி விஷ்ணு காலை நோக்கியும், பிரம்மா தலையையும் நோக்கி தேடிச் செல்லும்போது, இருவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில் ஆதியை தேடி மேலே சென்று கொண்டிருந்த பிரம்ம தேவன் தன்னுடன் சேர்ந்து கொண்டு பொய் சொல்லுமாறு தாழம்பூவை கேட்டுக் கொண்டார். இருவரும் திரும்பியவுடன், விஷ்ணு தேவன் தன் தோல்வியை ஒத்துக்கொண்டார். ஆனால், பிரம்ம தேவனோ ஆதியை கண்டுபிடித்துவிட்டதாக கூறினார். அவருக்கு சாதகமாக தாழம்பூவும் பொய் சொல்லியது. இந்த பொய்யினால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்ம தேவனின் ஒரு தலையை வெட்டினார். அவரை யாரும் வணங்க மாட்டார்கள் என சாபமிட்டார்.

சிவலிங்கத்தை வழிபட இனி இந்த மலரை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என தாழம்பூவை பார்த்து சபித்தார். அதிலிருந்து தாழம்பூவினால் சிவனுக்கு பூஜை செய்வதில்லை.

துளசி :

எந்த கடவுளாலும் தன்னை வெல்ல முடியாதபடி ஒரு வரத்தை விஷ்ணுவிடமிருந்து ஜலந்தர் என்னும் அசுரன் பெற்றான். அவனுடைய அட்டூழியத்தை தாங்க முடியாமல் சிவன் அவனை கொன்று சாம்பலாக்கினார்.

ஜலந்தரின் மனைவியான துளசி தன் கணவனின் மரணத்தால் ஏற்பட்ட வருத்தத்தாலும், ஏமாற்றப்பட்ட கோபத்தாலும் இனி சிவபெருமானை இறைதன்மையுள்ள தன் இலைகளை கொண்டு யாரும் வழிபடக்கூடாது என சாபமிட்டார். இதன் காரணமாக துளசியை சிவனுக்கு படைப்பதில்லை.

தேங்காய் நீர்

சிவபெருமானுக்கு தேங்காய்களை படைத்தாலும், தேங்காய் தண்ணீரை கொண்டு எப்போதும் சிவபெருமானை வழிபடக்கூடாது. சிவலிங்கத்தின் மீது படைக்கப்படும் அனைத்தும் நிர்மால்யாவாக கருதப்படுவதால், அதனை அதற்கு பிறகு உண்ணவோ பருகவோ கூடாது. தேங்காய் தண்ணீரை கடவுளுக்கு படைத்தால், அதனை கட்டாயமாக பருக வேண்டும் என்பதால், சிவலிங்கத்தின் மீது அதனைப் படைப்பதில்லை.

மஞ்சள்

புனிதமான மஞ்சள் பொடியை எப்போதும் சிவலிங்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் மஞ்சள் என்பது பெண்களின் அழகை மேம்படுத்த பயன்படுத்தப்படுவது, சிவலிங்கம் என்பது சிவனின் அடையாளம் என்பதால் அதுவும் பயன்படுத்தக்கூடாது.

குங்குமம்

திருமணமான பெண்கள் குங்குமத்தை புனிதமாக பார்க்கின்றனர். தன் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமென அதனை பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். ஆனால், சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்பதால், குங்குமத்தை கொண்டு அவருடைய சின்னத்தை வழிபடுவது புனிதமற்றதாக கருதப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *