வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள்;  ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள்;  ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அவர்களின் அறிவுரையின்படியும், தூத்துக்குடி மாவட்டத்தில், 1.1.2025-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31.12.2006 அன்று வரை பிறந்தவர்கள்) விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2025 தொடர்பாக கீழ்கண்டவாறு கால அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1. வரைவு வாக்களார் பட்டியல் வெளியிடும் நாள் 29.10.2024 (செவ்வாய்கிழமை)

2. படிவங்கள் பெறும் நாள் 29.10.2024 (செவ்வாய்) முதல் 28.11.2024 (வியாழன்) வரை

3. சிறப்புமுகாம் நடைபெறும் நாட்கள் 9.11.2024 (சனி), 10.11.2024 (ஞாயிறு), 23.11.2024 (சனி), 24.11.2024 (ஞாயிறு)

4. படிவங்கள் மீது விசாரணை மேற்கொண்டு முடிவுசெய்ய இறுதி நாள் 24.12.2024 (செவ்வாய்)

5. இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடும் நாள் 6.1.2025

இப்பணி மேற்கொள்ள ஏதுவாக ஏற்கனவே அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட படிவங்கள் 6, 6 ஏ, 6 பி, 7, 8 மற்றும் 9, 10, 11, 11 ஏ, 11 பி ஆகியவற்றினை வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ,வாக்காளர் பதிவு அலுவலர்களால் நியமனம் செய்யப்பட்ட மைய அலுவலர்கள் முலமாக 29.10.2024 முதல் 28.11.2024 வரை படிவங்கள் பெறும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு இறுதியாக 27.3.2024 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைங்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலும் அதன் பின்னர் 28.3.2024 முதல் 28.10.2024 வரையிலான தொடர் திருத்த காலத்தில் பெறப்பட்டு முடிவு செய்யப்பட்ட படிவங்கள் அடங்கிய பட்டியலையும் ஒருங்கிணைத்து ஒரே வரைவு வாக்காளர் பட்டியலாக 29.10.2024 அன்று வெளியிடப்படும்.

இந்த ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட வேண்டிய நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு மறு வரிசை எண் கொடுக்கப்படும். மேலும் வீட்டு எண் வாரியாக அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டிருக்கும்.

மனுக்கள் அளிப்பதற்கான காலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025 , 29.10.2024 முதல் தொடங்கப்பட்டு, இப்பணியில் 29.10.2024 முதல் 28.11.2024 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்ப படிவங்களை வாக்காளர்கள் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் அளிக்கலாம்.

மனுக்கள் பெறப்படும் இடங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1627 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 898 வாக்குச்சாவடி அமைவிட பள்ளி/கல்லூரிகளிகளிலும் வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்றிட நியமன அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட நியமன அலுவலர்களிடம் அரசு விடுமுறை தவிர்த்து வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி முடிய சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் நேரில் அளித்திடலாம்.

சிறப்பு முகாம் நாட்கள் வாக்காளர்களின் நலன் கருதி இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 9.11.2024 (சனிக்கிழமை), 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு விடுமுறை நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேற்கண்ட சிறப்பு முகாம் நாட்களிலும் வாக்காளர்கள் மனு அளித்திடலாம்.

வயது வரம்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயது தகுதி ஏற்படுத்தும் நாளாக ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி முதலாம் நாளினை, ஜனவரி முதலாம் நாள், ஏப்ரல் முதலாம் நாள், ஜூலை முதலாம் நாள் மற்றும் அக்டோபர் முதலாம் நாள் என நான்கு தகுதியேற்படுத்தும் நாட்களாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி 17 வயது முடிவடைந்த நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். எனினும் 1.1.2025 ம் நாளன்று 18 வயது பூர்த்தியடைந்த (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்துள்ள) நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்கத் திருத்தக் காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

மீதமுள்ள ஏப்ரல்-1, ஜூலை-1 மற்றும் அக்டோபர்-1 ஆகிய நாட்களில் 18 வயது பூர்த்தியடைந்து தகுதியடையும் விண்ணப்பதாரர்களின் (முன்னதாகவே பெறப்பட்ட) விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தக் காலத்தில் அந்தந்த காலாண்டுகளில் தகுதியடையும் விண்ணப்பங்கள் அந்தந்தக் காலாண்டின் முதல் மாதத்தில் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் .

மேற்க்ண்டதகவல்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *