• November 1, 2024

வலம்புரி சங்கு பூஜையின் பலன்கள்

 வலம்புரி சங்கு பூஜையின் பலன்கள்

இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை, நம் வீட்டின்; அழகிற்காகவும், வீட்டின் நலனுக்காகவும் பயன்படுத்துகிறோம். அவற்றில் முதன்மை இடம் வகிப்பவை ருத்ராட்சம், சாலக்கிராமம் மற்றும் வலம்புரி சங்கு.

 ருத்ராட்சம் – சிவனுக்குரியது, சாலக்கிராமம் – விஷ்ணுவிற்குரியது, வலம்புரி சங்கு – லட்சுமிக்குரியது. வீட்டில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிப்புகுவாள். அவற்றில் முதன்மை பொருள் தான் இந்த வலம்புரி சங்கு.

செல்வத்தை அள்ளித்தருபவள் மகாலட்சுமி. அவளின் பார்வைபட்டால் குப்பைமேட்டில் இருப்பவன் கூட பணக்காரனாக மாறிவிடுவான். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவரின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றிவிடும். மகாலட்சுமியின் பார்வை ஒருவர் இழந்த செல்வம், பெயர், புகழ் போன்றவற்றை திரும்பப்பெறும் யோகத்தை அளிக்கிறது.

ஆயிரம் சிப்பிகள் ஒரு இடம்புரி சங்கிற்கு சமமாகும். ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கிற்கு ஈடாகும். வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

 தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் தோஷம் உள்ள நபர்கள் வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி 27 செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் தோஷம் விலகும், திருமணம் விரைவில் நடக்கும்.

 சித்ரா பவுர்ணமி, ஆனி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பவுர்ணமி போன்ற ஆன்மிக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் – மனைவி நல்ல ஆயுளுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தைபேறு இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

 பிறந்த குழந்தைக்கு வலம்புரி சங்கு மூலம் பால் ஊற்றினால், குழந்தை நல்ல ஆரோக்கியம் பெறும். மேலும், இதனால் குழந்தை மேல் யாருடைய கண் திருஷ்டியும் படாது. உங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது.

 வாழையிலை அல்லது தட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். வாழையிலை அல்லது தட்டில் பச்சை அரிசி அல்லது நெல் வைத்து அதன் மீது வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்ய வேண்டும்.வலம்புரி சங்கு வடக்கு அல்லது தெற்கு முகம் பார்த்து தான் வைக்க வேண்டும். வலம்புரி சங்கில் தண்ணீர் மற்றும் துளசி வைத்து பூஜை செய்வது சிறப்பு. வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்யும் போது மலர்கள், தங்கம் அல்லது பணம் வைத்தும் பூஜை செய்யலாம்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *