• November 1, 2024

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு; முன்னெச்சரிக்கை தேவை… அலட்சியம் வேண்டாம்..!

 வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு; முன்னெச்சரிக்கை தேவை… அலட்சியம் வேண்டாம்..!

வடகிழக்கு பருவமழை நெருங்கும் வேளையில் தமிழகத்தில் கடலோர பகுதியில் முழுவதும் தயாராக இருத்தல் வேண்டும்! குறிப்பாக திருவள்ளூர் முதல் காரைக்கால்/ராமநாதபுரம்/தூத்துக்குடி கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்!

2005,2008, 2010,2020,2021 போன்று இந்தாண்டும் தமிழகத்தில் பருவமழை தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் ஏற்கனவே அறிவித்து உள்ளது.;

14ம் தேதி ஒட்டி தென்கிழக்கு வங்கக்கடலில் தாழ்வு நிலை உருவாகும் இது வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டி இருக்கும் மத்திய மேற்கு வங்கக்கடல் நோக்கி (இலங்கை – தமிழக- தென் ஆந்திரா) கடற்கரை நோக்கி நகரும் இதன் விளைவாக 16-10-2024 முதல் 20-10-2024 இடைப்பட்ட நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் அதன் பின்னர் பருவமழை தீவிரம் அடையும் வேளையில் குறைவான நேரத்தில் இரவு வேளையில் மிக அதிகமான மழைப்பொழிவு இருக்கும் தகுந்த முன்னெச்சரிக்கை தேவை!

தமிழக உள் மாவட்டங்கள்- மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இயல்பான மழை (அ) சற்று கூட கூடிய மழை இருக்கும் மொத்தத்தில் வட மற்றும் தென் மாவட்டங்கள் என்று சொல்வதை விட கடலோர மாவட்டங்களில் முழுவதும் நல்ல மழை இருக்கிறது!

பொதுவாக மத்திய பசிபிக் பெருங்கடலில் மெலிந்த லா-நினா (Weaken La-Nina) நிலவுகிறது இது அடுத்த இரண்டு மாதங்களில் (வடகிழக்கு பருவமழை) காலகட்டத்தில் ஒட்டி வலுப்பெறும் சமயத்தில் தமிழகத்தை  ஒட்டி இருக்கும் இலங்கை -தமிழக கடற்கரை (தென்மேற்கு வங்கக்கடல்) ஆந்திர கடற்கரை (மத்திய மேற்கு வங்கக்கடல்) கடலில் வெப்பநிலை 29°C (Sea Level Surface Temperature) நீடித்து வருகிறது

இதே லா-நினா காலகட்டத்தில் 2018,2016,2013,2007 வருடங்களில் -40% -70% மழை மிக குறைவாக பெய்து இருக்கிறது குறிப்பாக 2016 -65%, 2018 -50%, 2013 -45% தமிழகத்தில் குறைவாக மழை பதிவானது இதில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இரண்டு புயல்கள் மத்திய ஆந்திரா நோக்கி சென்றது இரண்டு தாழ்வு மண்டலங்கள் ஒரு தீவிர தாழ்வு பகுதி மட்டுமே தமிழகத்தை நோக்கி வந்தது இதனால் அக்காலகட்டத்தில் மழை பற்றாக்குறை இருந்தது ஆனால் இந்த வருடம் அவ்வாறு இருக்க போவது இல்லை இது தான் நமக்கு கிடைத்த பிளஸ் பாயின்ட் ஆகையால் மழைநீர் சேகரிப்பு தேவை! முன்னெச்சரிக்கை இருத்தல் வேண்டும்! கவனம் வேண்டும்! அலட்சியமாக இருத்தல் வேண்டாம் தயாராக இருத்தல் வேண்டும்.. மழை வருகிறது அல்லது வரவில்லை என்றாலும் தயாராக இருத்தல் வேண்டும்!

தமிழகத்தில் நேற்று முதல் லேசான கிழக்கு திசை காற்று (Easterly Winds) வர தொடங்கி இருக்கிறது.. கடலில் உருவாகும் மேகங்கள் உள்ள பகுதி நோக்கி நகர தொடங்கி இருக்கிறது.. லட்சத்தீவு அருகில் தாழ்வு நிலை நிலவுகிறது இது கொஞ்சம் கொஞ்சமாக வடமேற்கு திசையில் நகரும்! மற்றொரு தாழ்வு நிலை அதே பகுதியில் அடுத்த 11ம்தேதி ஒட்டி உருவாகும் இந்த இரு தாழ்வு நிலைகளும் ஒன்றாக இணைந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் அப்போது தமிழகத்தை ஒட்டி வங்கக்கடலில் கிழக்கு திசை காற்றும் வலுவாக நிலப்பகுதி நோக்கி வீசும்.. இவை அனைத்தும் வடகிழக்கு பருவமழை சாதகமான சூழ்நிலை உருவாகும்! இந்திய/சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் இந்த வாரம் இறுதி அல்லது அடுத்த வாரம்.. அதனை ஒட்டி தென்கிழக்கு வங்கக்கடல் -அந்தமான் அருகில் முதல் தாழ்வு நிலை உருவாகி வலுப்பெற்று தமிழகத்தை ஒட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் (இலங்கை) கடற்கரை நோக்கி நகரும் 15-10-2024 – 18-10-2024 இடைப்பட்ட நாட்களில்.. தென் மேற்கு பருவமழை தென் இந்திய பகுதியில் 15° Latitude நமது பகுதியில் விலகவில்லை அரபிக்கடல் நிகழ்வு உருவாகும் பொழுது முடிவுக்கு வரும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வேண்டும் என்றால் முதலில் தென்மேற்கு பருவமழை முழுமையான இந்திய பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.. தமிழகத்தை நோக்கி வலுவான கிழக்கு திசை காற்று வீச வேண்டும்  தமிழக பகுதியில் தோராயமாக 80% ஈரப்பதம் அதிகரித்து இருத்தல் வேண்டும்.. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பரவலாக குறைந்தது 3 செ.மீ மேல் மழை பெய்ய வேண்டும்

இந்த நிலை வரும் போது தான் இந்திய/ சென்னை வானிலை மையம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கும்! இப்போது இருக்கும் சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னதாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதற்கு முன்பு 2019,2008,2006,2005,1997,1996 ஆண்டுகளில் அக்டோபர் 10ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் தொடங்கி இருக்கிறது.

2008ம் ஆண்டு தமிழகத்தில்+55% மழை அதிகமாகவும், சென்னையில்+45% அதிகமாக பெய்து இருக்கிறது.. 2005ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் தமிழகத்தில்+120%,சென்னையில் +155% கூடுதலாக அதிக மழை பெய்தது.. இந்த ஆண்டு …? பார்க்கலாம் காலம் பதில் சொல்லும்.. முன்னெச்சரிக்கை தேவை. அலட்சியம் வேண்டாம்..!

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *