தூத்துக்குடி புத்தக திருவிழாவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
தூத்துக்குடியில் 5 வது புத்தக திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது, சிறப்பு நிகழ்வாக முத்தமிழ் முத்துக்கள் படைப்பாளிகளை பற்றிய கருத்துக்கள் நிகழ்வுகள் ஓவியருடன் கலந்துரையாடல் என முதல் நிகழ்வாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி ரொட்டீசியா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்று பேசினார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக செந்தமிழ் சிற்பிகள் அரங்க ஓவியர் வள்ளிநாயகம் படைப்பும் பகிர்ந்தலும் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். முத்தமிழ் முத்துக்கள் அரங்கில் படைப்பாளிகளை வரைந்தும் காட்சிப்படுத்தியும் முத்து அரங்கத்திற்கு புதிய வடிவத்தினை மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலோடு செயல்படுத்திய சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக செந்தமிழ் சிற்பிகள் அரங்கத்தின் ஓவியர் வள்ளிநாயகம் குறித்து எழுத்தாளர்களோடும் மாணவர்களோடும் பொதுமக்களோடும் வாசகர்களோடும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் எழுத்தாளர் நெல்லை தேவன் கவிஞர் எழுத்தாளர் மாரிமுத்து கவிஞர் செல்வராஜ் கவிஞர் மூக்கு பேரி தேவதாசன் கவிஞர் எழுத்தாளர் புலவர் முத்துசாமி, மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர், நூலகர் பிரம நாயகம் மாணிக்கவாசகம் சாரதா அருணாசலம் மேரி ரெஜினா விஜயலட்சுமி லதா மணிகண்டன் சையது முகம்மது ஷெரிப் தங்கதுரையரசி பிரியதர்ஷினி ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வரும் நாட்களில் புத்தக வெளியீடு எழுத்தாளர்களுடன் பயிற்சிகள், நடத்தி இளம் படைப்பாளர்களை உருவாக்கவும் ஊக்கம் இடவும் ஆலோசிக்கப்பட்டது.