முன்னோர்களின் சாபம் தணிய  ஒரு சொம்பு தண்ணீரே சமர்ப்பணம்

 முன்னோர்களின் சாபம் தணிய  ஒரு சொம்பு தண்ணீரே சமர்ப்பணம்

அமாவாசை தினத்தில் பெண்கள் ஒரு சொம்பு தண்ணீரை வீட்டில் இப்படி வைத்தால் போதும். முன்னோர்களுக்கு இருக்கும் எப்பேர்பட்ட கோபமும் தணிந்து, அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்று விடலாம்.

 பெண்கள் திருமணமாகி வந்த பின்பு, அந்தப் பெண்ணினுடைய அம்மா அப்பா தாத்தா பாட்டி, என்று அவர்களுடைய முன்னோர்களை  நினைத்து புகுந்த வீட்டில் வழிபாடு செய்ய முடியாது. இதற்கு நம்முடைய சாஸ்திரமும் இடம் கொடுக்கவில்லை.

திருமணமான பெண்ணின் பிறந்த வீட்டுப் பக்கத்தில் இருக்கும் இறந்தவர்களின் ஆத்மாவானது, புகுந்த வீட்டில் வசிக்கும் பெண்ணினுடைய வீட்டிற்குள் நுழையவே முடியாது. காரணம் கணவன் வீட்டில் வாழ்ந்த முன்னோர்களின் ஆத்மா, மற்ற ஆத்மாக்களை தங்களுடைய வீட்டிற்குள் நுழைய அனுமதி கொடுக்காதாம்.

 தன்னுடைய பேத்தி தன்னுடைய மகள் என்று பெண் வீட்டு பக்கத்தில் உயிரிழந்த முன்னோர்களின் மனதிலும் நிச்சயமாக ஆசை இருக்கத்தான் செய்யும். அவர்களைத் திருப்திப்படுத்த அவர்களை அமைதிப்படுத்த, அமாவாசை தினத்தில் தங்களுடைய புகுந்த வீட்டில்  அமாவாசை தினத்தில் வீட்டிற்கு வெளியே தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய சொம்பில் தாய் தந்தை மற்றும் முன்னோர்களை நினைத்து தண்ணீரை வைத்து விடுங்கள்.

நீங்கள் அவர்களை நினைத்து வைக்கும் இந்த ஒரு சொம்பு தண்ணீரே போதும். அவர்களது மனதை குளிர வைத்து விடும். இதேபோல் நம்முடைய வீட்டில் நாம் இரவு தூங்கும் போது, நம்முடைய குலதெய்வமும் நம்முடைய முன்னோர்களும் நம்மை காண வருவார்கள் என்பது ஐதீகம். தினமும் சமையலறையில் ஒரு சொம்பு தண்ணீரை, மூடி போடாமல் திறந்தபடியே பெண்கள் தங்களுடைய கையால் வைத்து விட வேண்டும்.

இந்தத் தண்ணீர் உங்களைக் காண வரும் முன்னோர்கள், உங்கள் வீட்டு முன்னோர்கள், அதாவது பெண்களுக்கு திருமணம் ஆன பின்பு, கணவரின் வீட்டு முன்னோர்கள் தான், அந்தப் பெண்ணின் முன்னோர்களாக கருதப்படுகிறார்கள்.

அவர்கள் உங்களுடைய வீட்டிற்கு வரும்போது மனம் மகிழ்ந்து அந்த தண்ணீரை பருகி, உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்வார்கள் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. உங்களுடைய வீட்டின் நன்மைக்காக இந்த இரண்டு பரிகாரங்களை நீங்கள் செய்து வருவதன் மூலம் முன்னோர்களின் கோபம் சாபம் என்று ஏதாவது கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் அது மறைந்துவிடும் என்பது நம்பிக்கை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *