கோவில் கோபுரம்/ விமானம் பற்றிய விளக்கம்

 கோவில் கோபுரம்/ விமானம் பற்றிய விளக்கம்

கோவில் கோபுரம் , விமானம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன? என்பது பற்றிய விளக்கம்இங்கே காணலாம்.

கோவில்  என்பதை படுத்திருக்கும் ஒரு மனிதனின் உடலாக எண்ணிக் கொள்ள வேண்டும்.  இதனையே  திருமந்திரத்தல் திருமூலர்  ” மானிடர் ஆக்கை சிதம்பரம் “என்பார்

மனிதனின் தலை கழுத்து மார்பு, தொப்புள், கால்கள், பாதங்கள் இப்படி யாக கோவிலின்  கர்ப்பக் கிரகம் முதல் ராஜகோபுரம் வரை உள்ளன,

கருவரை  விமானம் = தலை

அர்த்த மண்டபம்  = கழுத்து

மகாமண்டபம்  = மார்பு ( இங்குதான் இதய துடிப்பு இருப்பது போல் நடராஜர் நடனமாடும் சன்னதி  அமைக்கப்பட்டிருக்கும்

கொடிமரம் = தொப்புள்

ராஜகோபுரம் = பாதங்கள்

இப்படி இறைத்திருமேனியாக இருக்கும் கோவிலில் கருவரையில் மேல் விமானம் உள்ளது. மானம் என்றால் அளவு வி / என்றால் கடந்தது எனவே அளவுகடந்த தெய்வீக சக்தி கொண்டது விமானம்

கோபுரம் = கோ+ புரம் , கோ என்றால் இறைவன்,  புரம் என்றால் இரு்ப்பிடம் எனவே கோபுரம் என்பது இறைவன் இருப்பிடம்  அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் கோ புரம் தெரியும், கோ புரத்தை உயரமாக அமைத்துள்ளார்கள்

இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்னும் சொல் வழக்கு உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *