• November 1, 2024

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தினசரி ஹெல்மெட் சோதனை

 தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தினசரி ஹெல்மெட் சோதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூபாய் 2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று  காலை 9 மணி முதல் தூத்துக்குடி நகர உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா ஆலோசனைப்படி போக்குவரத்து உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் 10-க்கும்  மேற்பட்ட போக்குவரத்து போலீசார் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை முன்பு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடித்து ரூ 1,௦௦௦முதல் 2,000 வரை அபராதம் விகித்தனர்.

100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தி பள்ளி மற்றும் அலுவலகங்கள் செல்லும் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது “இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் 90% பேர் ஹெல்மெட் அணியவில்லை. இதனால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமான மாணவ மாணவிகள் இருசக்கர வாகனங்கள் ஓட்டி செல்கிறார்கள். இதனால் அவர்களது பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வாகன சோதனை தினசரி காலையில் மாலையிலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *