• April 30, 2024

கரிசல் பூமி விவசாயிகளின் பொன் ஏர் திருவிழா; கிராமங்கள் விழாக்கோலம்

 கரிசல் பூமி விவசாயிகளின் பொன் ஏர் திருவிழா; கிராமங்கள் விழாக்கோலம்

தமிழ் புத்தாண்டு குரோதி வருடத்தை முன்னிட்டு கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் பொன் ஏர் பூட்டும் திருவிழா கொண்டாடப்பட்டது,. இதையொட்டி கிராமங்கள் விழாக்கோலம் பூண்டன

கோவில்பட்டி கோட்டம் பிதப்புரம் கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பசுக்கள், மற்றும் காளை மாடுகளை ஊரணிகளில் குளிப்பாட்டி கொம்புகளுக்கு மஞ்சள் பூசி, குங்குமமிட்டும், டிராக்டர்களை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் பூசியும், ரிப்பன் பலூன் கட்டியும் அலங்கரித்தனர்.

 வீடுகளுக்கு முன்னால் பூஜை பொருட்கள், விதை, வித்துக்கள் வைத்து சூடமேற்றி வரக்கூடிய பருவ ஆண்டில் நல்ல மழை அளவோடு பெய்து சிறப்பாக விளைந்து நல்ல மகசூல் கிடைக்கவும், நிலங்களில் பணிபுரியும் போது விஷ பூச்சிகள், விவசாய பணிக்கு பயன்படுத்தும் போது ஆயுதங்களால் கவனக்குறைவாக எதுவும் தவறு நேராமல் இருக்கவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உணவு, நீர், சுகாதாரம், அமைதி கிடைத்திடவும்  பூஜை செய்து வழிபாடு செய்தனர்.


பின்னர் ஒரே நேரத்தில்  வீடுகளில் இருந்து உழவு மாடுகள் அதனை தொடர்ந்து டிராக்டர்கள் புடை சூழ ஊர் பொது நிலத்தில் வடக்கில் இருந்து தெற்காக ஏர் பூட்டி உழவு செய்தனர். பொன் ஏர் திருவிழா முடிந்து வீடு திரும்பிய விவசாயிகளுக்கு வீடுகளில் தாய்மார்கள் பாதம் கழுவி மஞ்சள் மற்றும் குங்குமிட்டு பூஜை செய்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பின்னர் சம்பிரதாய வழக்கப்படி விவசாயிகளுக்கு பானக்காரம் எனப்படும் புளிக்கரைசல் மற்றும் வெல்லம் கலந்த பானம் வழங்கினர்.

இந்கழ்ச்சிக்கு கிராமத் தலைவர் ராமசுப்பு, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன். மூத்த விவசாயிகள் ஞானசேகர், மாரிக்கண்ணன், பாபுராஜ், பரமானந்தம், தங்கவேலு உள்பட ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

பிள்ளையார்நத்தம் கிராமம்

கோவில்பட்டி வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் பொன் ஏர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா ஊரில் உள்ள விவசாய சங்க கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அத்துடன் அனைத்து பூஜை பொருள்களுடன் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு,  ஊர் மேற்கே உள்ள ஊர் பெரியவர் அப்பாசாமி நாயக்கர் நிலத்தில் விவசாயிகள் ட்ராக்டரை நிறுத்தி, குமார் ஆசாரி (தச்சர் ), ஆறுமுகம் ஆசாரி(கொல்லர் ) ஆகியோர் பூமி மாதாவுக்கு பூஜை செய்தார்கள்.

அங்கு சிறு அளவில்  பசு சாணம் கொண்டு, பிள்ளையார் உருவாக்கி பூஜை செய்து கடவுளுக்கு பச்சரிசி, வெல்லம், கம்பு அரிசி அதனுடன் நவ தானியங்கள் வைக்கப்பட்டது. பூஜை முடித்தவுடன், நவ தானியங்கள் விதைக்கப்பட்டது. காட்டில் உள்ள களை செடிகள் அகற்றப்பட்டது. முடிவில் அனைத்து விவசாயிகளும் நல்ல மழை வேண்டியும், நல்ல மகசூல், பால் வளம் வேண்டியும் உழவு செய்தார்கள்.

முடிவில் பச்ச அரிசி, வெல்லம், பாக்கு, வெற்றிலை, கம்பு அரிசி நனைய விட்டு தயார் செய்ததை பிரசாதமாக வழங்கினார்கள். அத்துடன் பானக்கரம், நீர் மோர் உழவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஊருக்குள் வரும் உழவர்கள் மீது முறை பெண்கள் தங்கள் முறை மாமன்கள் மீது மஞ்சள் தண்ணீர்  ஊற்றி வரவேற்றார்கள்.

 இந்த நிகழ்ச்சியில் தேசிய விவசாயிகள்  சங்க மாநில  தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு, கம்மவார் நாயுடு ஜன சங்கம் பொறுப்பாளர் , ஒன்றிய தலைவர் சவுந்திரராஜன் , சுந்தர்ராஜ், கந்தசாமி நாயக்கர், பொன் சீனிவாசன் ,பெருமாள்சாமி, சீனிவாசன்,சேர்மன் கனகராஜ் ,ஆழ்வார்சாமி நாயக்கர் ,  தேசிய விவசாயிகள் சங்க கிளை தலைவர் தனபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய தலைவர் சவுந்திரராஜன் , சுந்தர்ராஜ், கந்தசாமி நாயக்கர், பொன் சீனிவாசன் ,பெருமாள்சாமி, சீனிவாசன்,கனகராஜ்,ஆழ்வார்சாமி நாயக்கர் ,  தேசிய விவசாயிகள் சங்க கிளை தலைவர் தனபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 80 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன.

சின்னவநாயக்கன்பட்டி

புதூர் அருகே உ ள்ள சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் கரிசல் பூமி விவசாயிகள் பொன் ஏர் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு விவசாயிகள் காலையில் தங்கள் காளை மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பொட்டு வைத்து , மாலையிட்டு தயார்படுத்தினர்.

மேலும் கலப்பைகளுக்கு மஞ்சள் பூசி, நெல், பருத்தி, பயறு உள்ளிட்ட தானிய விதிகளுக்கு வீடுகளில் பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து பொதுக்கோயிலான பிள்ளையார் கோயிலில் வைத்து கலப்பை, வாச்சாத்து, சாட்டைக் கம்பு, தானிய விதைகள் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்பு கோவில் நிலத்தில் ஏர் பூட்டி உழுது விவசாயப் பணிகளை தொடங்கினர். நிலத்தில் உழுது விட்டு வீடு திரும்பிய போது பெண்கள் வீடுகளின் முன்பு முறைமாமன் மீது ஊற்றுவதற்காக மஞ்சள் நீருடன் காத்திருந்தனர்.பின்னர் மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்றது. அனைவருக்கும் பானகரம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் எர்ரையா , கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன், பட்டத்துக்காரர் பாரதிதாசன், அம்பலம் முத்துகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் பால்ராஜ், வேலுச்சாமி, மூத்த விவசாயிகள் சுப்புராஜ், ராமசாமி, முத்துமாரிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *