• May 19, 2024

தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் வ.உ.சி.அரசு பொறியியல் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

 தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் வ.உ.சி.அரசு பொறியியல் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கடத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

 தொகுதி  முழுவதும் அமைக்கப்படும் வாக்குசாவடி மையங்களில் பதிவாகும் மின்னணு வாக்கப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தூத்துக்குடி வ.உ.சி/அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான் அறையில் வைக்கப்படும்.

அந்த அறையை பூட்டி சீல் வைக்கும் தேர்தல அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை நடக்கும் அன்றுதான் திறப்பார்கள். அதுவரை வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகள் மற்றும் கல்லூரி முழுவதும் 2௪ மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் பாதுகாப்பது படையினர் காவலுக்கு இருப்பார்கள்.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் பற்றி ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு  மேற்கொண்டார். வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியை ஆட்சியர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டார்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.லோக.பாலாஜி சரவணன் அ,மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *