• April 27, 2024

ஆண்டுக்கு 6 இலவச கியாஸ்  சிலிண்டர்; அதிமுக தேர்தல்  அறிக்கையில் 133 வாக்குறுதிகள்  

 ஆண்டுக்கு 6 இலவச கியாஸ்  சிலிண்டர்; அதிமுக தேர்தல்  அறிக்கையில் 133 வாக்குறுதிகள்  

: மகளிருக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை, சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட 133 தேர்தல் வாக்குறுதியை அ.தி.மு.க., அறிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ,தலைமைக்கழக நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில்  133 வாக்குறுதிகள் இடம் பெற்று உள்ளன. அவற்றில் முக்கிய வாக்குறுதிகள் விவரம் வருமாறு:-

*சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,.

*வழக்காடு மொழி தமிழ் இடம்பெற முயற்சி மேற்கொள்ளப்படும்,

*மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்ட உறுதி திட்டத்தை நாட்களை 150 நாட்களாக உயர்த்தவும், சம்பளத்தை ரூ.450 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுப்போம்.

*மேகதாது அணை, முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்படும்

*பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை மத்திய அரசு மூலம் தடுத்து நிறுத்டுவோம்,.

*கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் வலியுறுத்துவோம்

*மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பயன்பட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுப்போம்,

*காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம்,

*கச்சத்தீவை மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க்ப்படும்.

*பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியம் ரூ.5 லட்சமாக உயர்த்த வலியுறுத்துவோம்,

*மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்

*சென்னை மெட்ரோ ரெயிலை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வலியுறுத்தப்படும்

*கிளாம்பாக்கத்தில் இருந்து ஒரகடம் வரை மெட்ரோ ரெயில் இயக்க வலியுறுத்துவோம்.

*மத்திய அரசு தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

*ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க முயற்சி எடுப்போம்.

*முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

*லோக்சபா குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்,

*கவர்னர் நியமனத்தின் போது மாநில அரசின் கருத்துகளை கேட்க வேண்டும்.என்பதை நிலைநிறுத்துவோம்,

*குற்ற வழக்கு சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட செய்வோம்,.

*பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்,

*மத்திய அரசு அறிவித்த ஒசூர் விமான நிலையத்தை விரைந்து முடித்திட வலியுறுத்துவோம்

*நாகை, திருவாரூர் உள்ளடக்கிய ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம்

*நீட் தேர்வுக்கு மாற்றுத்தேர்வு முறை கொண்டு வர வலியுறுத்தப்படும்

*மதுரையில் ஐஐடி ஐஐஎம்அமைக்க வலியுறுத்துவோம்,

*குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு 6 இலவச கியாஸ்  சிலிண்டர் கிடைக்க செய்வோம்,

*அப்பளம் , குண்டு வத்தல் பரமத்தி வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைக்க வலியுறுத்துவோம் .

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *