பா.ஜனதாவுடன், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைப்பு
நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் பாஜக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைந்தது.
மத்திய இணை மந்திரி எல் முருகன் மற்றும் கட்சி மேல்நிலைத் தலைவர்களை சந்தித்து சரத்குமார் தனது முடிவை தெரிவித்தார். எதிரணியில் இன்று சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை, பா ஜனதாவில் இணைத்துக்கொண்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து, இந்த முடிவை வெளியிட்டார். அப்போது கராத்தே தியாகராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்
சரத்குமாருக்கு சால்வை அணிவித்து அண்ணாமலை வரவேற்றார்.
பாஜகவுடன் கட்சியை இணைத்தது பற்றி சரத்குமார் கூறும்போது, ” மக்கள் பணிக்கான தொடக்கம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், பாஜகவுடன் இணைப்பு என்பது கட்சியின் முடிவு அல்ல என்றும் தெரிவித்தார்.
சரத்குமார்,2007 ம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது







