• November 1, 2024

அதிமுகவிற்கு கழகமே குடும்பம், திமுகவிற்கு குடும்பமே கழகம்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம் 

 அதிமுகவிற்கு கழகமே குடும்பம், திமுகவிற்கு குடும்பமே கழகம்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம் 

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அவர் தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்காக ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது :-

 17 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுக,மாநில உரிமைக்காக எதையுமே செய்து கொடுக்கவில்லை.

1998 ஆம் ஆண்டு காவேரி நீரை பெற்று தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழக விவசாயிகள் நலன் கருதி பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சி அதிமுக.

மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்துக்காக என்ன செய்தது 

பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளே உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக உள்ள போது, தமிழகத்தில் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஏன் கொண்டு வரக்கூடாது. தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர என்ன நடவடிக்கையை இந்த விடியா திமுக அரசு எடுத்துள்ளது?

 மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகத்தின் நலனுக்காக எவ்வித திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியின் போது இயற்கை பேரிடரை சமாளிப்பதற்காக 1 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு தொகை கேட்டோம்.ஆனால் பாஜக அரசு 6000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியது. 

 தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து நேற்று அதிமுக நடத்திய வெற்றிகரமான போராட்டத்தை திசை திருப்பவே ஆளுநர் கால்டுவெல் பற்றியும், ஜி யு போப் பற்றியும் தவறான தகவல்களை கூறி வருகிறார். இதிலிருந்து ஆளுநருக்கும் திமுக விற்கும் இடையேயான உறவு என்னவென்று தெரிந்து கொள்ள முடிகிறது.

தமிழகத்தில் குடும்ப அரசியல் நடப்பதாக பிரதமர் மோடி விமர்சித்து உள்ளார். அதிமுகவில் அனைவரும் குடும்பம் போல பழகி வருகிறோம் எனவே அதிமுகவை பொருத்தவரை கழகமே குடும்பம், ஆனால் திமுகவை பொருத்தவரை குடும்பமே கழகம்.பிரதமர் மோடி கூறிய குடும்ப அரசியல் திமுகவுக்கு தான் பொருந்தும் அதிமுகவுக்கு பொருந்தாது.

இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *