• May 9, 2024

அருள் தரும்  மகாலட்சுமி

 அருள் தரும்  மகாலட்சுமி

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங் களும் கிடைக்கும். மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.

மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.

மகா லட்சுமிக்கு “ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா” என்ற பெயர்களும் உண்டு.

அவளுக்கு பிரியமான பூ ‘செவ்வந்தி’ எனப்படும் “சாமந்திப்பூ”.

நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக் கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.

ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத் திரம் பாடி பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.

. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் அதை மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.

பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

மகா விஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகி யவை களிலும் மகா லட்சுமி வாசம் செய்கிறாள். அதனா ல்தான் சுபகாரியங்களில் இவை பயன்படு த்தப்படு கின்றன.

தலை முடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.. தீபாவளி யன்று அதிகாலை மட்டும் “மகாலட்சுமி” நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.

யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

ஸ்ரீ வைஷ்ண வத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ‘ஸ்ரீஸ்துதி’ என்னும் ஸ்தோத் திரத்தில் ஸ்ரீ மகா லட்சுமியை …மங்களத்துக் கெல்லாம் மங்களமானவள்” என்று புகழ்ந்து பாடுகிறார்.

ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.

நம்மாழ்வார் ‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா’ என்ற கணப்பொழுதுகூட பிரியாது மகா விஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.

 திரு மழிசையாழ் வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.

குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக் கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரிய வர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகா லட்சுமியே.

மகா விஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.

வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.

மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்கள் அவளுக்கு உண்டு.

லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறம்.

 லட்சுமிக்கு “உலூ கம்” எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது “ஆந்தையை” வழிபடுவது வழக்கம்.

மகா லட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கி ரனின் அதி தேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கி ழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள்தரும்.

லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை – குேபர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.

லட்சுமியின் திருக்கரங்கள் ‘ஸ்வர்ண ஹஸ்தம்’ எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத சஸ்தத்துடன் அருள் புரிகின்றார்கள்.

லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி, அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்கு கின்றன.

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்ட போக பாக்கியங் களும் கிடைக்கும்.

 லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் வளரும்.

 புதுக் கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப் பார்கள்.

வருத்தத் தால் மகா விஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீ வாஞ்சியம் என்ற தலம். நன்னிலத் திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக் கப்படும் மகா லட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீ வாஞ்சியம் ( திரு வாஞ்சியம் ) என்ற பெயர் ஏற்படக் காரணம்.

 மகா லட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.

 அதி காலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்ற வற்றைச் சொல்லிக் கொண்டிருந் தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

 இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் “மகாலட்சுமி” நிலையாக இருப்பாள்.

 கோமாதா ( பசு ) வை தெய்வமாக மகா லட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

 லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக் களுக்கு “தேவதை”.

 மகா லட்சுமியின் திருக் குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.

மகா லட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.

பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்ட மியில் பூஜிக்கிறார்.

மனு தேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந் தியிலும் பூஜிக்கிறார்.

தேவேந் திரன் மகா லட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர் யங்களையும், ஐரா வதத்தையும், அமராவதி பட்டணத் தையும் பெற்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *