தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய கனிமொழி
![தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய கனிமொழி](https://tn96news.com/wp-content/uploads/2024/03/8746781d-86ae-4d22-b1bf-230d837a0d8e-850x560.jpeg)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவியாக மடிக்கணினி மற்றும் பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி , 49 கல்லூரி மாணவ, மாணவி களுக்கு மடிக்கணினி மற்றும் 6 பேருக்கு சத்துணவு பணி நியமன ஆணைகள் வழங்கினார். 30 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி 49 நபர்களுக்கு மொத்த மதிப்பு 14,70,000 ஆகும்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2024/03/deb73555-3d0e-4bf6-8ee7-a5665f81ff30-1024x606.jpeg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)