மகாபாரதத்தில் விதுரர் கூறிய 17 வகை மூடர்கள்

 மகாபாரதத்தில் விதுரர் கூறிய 17 வகை மூடர்கள்

1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி அடைபவன்.

2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்.

3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்.

4) உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையை செய்பவன்.

5)  தானத்தைக் கேட்க கூடாதவனிடம் கேட்பவன்.

6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய்யாமல்  தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருப்ப‍வன்.

7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம்,  பொருளைக் கொண்டு பிழைப்பவன்.

8) பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு, பலமுள்ள‍வனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.

9) பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளையோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது ‘நினைவில் இல்லையே…’ என்று சொல்பவன்.

10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன்.அதாவது பிறர் மனைவியரை அடைபவன்.

11) தனது மனைவியை பற்றி  அவனே  பிறரிடம் தவறாக பேசுபவன்.

12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால்  விலகியதாக தற்பெருமை பேசுபவன்.

13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.

14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.

15) தனது பேச்சினை ஏளனமாக கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.

16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித் தற்பெருமை பேசுபவன்.

17) எதிரிகளிடம் சரணடைந்து அவனுக்கு வேண்டிய பணிகளை பணிவாக செய்பவன்.

இவர்களே அந்த 17 வகையான மூடர்கள் என்று விதுரர் கூறியுள்ளார்.

தொகுப்பு: காசிவிஸ்வநாதன்-திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *