கோவில்பட்டியில் தேசிய மருத்துவர்கள் தின விழா
நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும்,மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரராயின் பிறந்த தினத்தை தேசிய மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
டாக்டர்கள் பலர் ரத்ததானம் வழங்கி டாக்டர் பிதான்சந்தரராய் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும் மனிதகுல சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கவும்,மனச்சாட்சியுடனும், கண்ணியத்துடனும், தொழிலை மேற்கொள்ளவும்,மருத்துவ தொழிலின் கவுரவம் மற்றும் உன்னத மரபுகளை எல்லா வகையிலும் காப்பாற்றிடவும். இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்திடவும், மனித குலம் நலமாக வாழ மருத்துவ சேவையாற்றிட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவர் சுதா, ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட பயிற்சியாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் அகத்தியன், ரோட்டரி சாலை பாதுகாப்பு மாவட்ட தலைவர் சீனிவாசன்,முன்னாள் துணை ஆளுநர்கள் நாராயணசாமி, வி.எஸ். பாபு, ஜெயபிரகாஷ் நாராயணசாமி,ஆசியாபார்ம்ஸ் பாபு,முன்னாள் தலைவர்கள் ரவி மாணிக்கம், நாராயணசாமி,வீராச்சாமி,பரமேஸ்வரன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் குழந்தைகள் நல மருத்துவர் துரை பத்மநாபன் நன்றி கூறினார். ரோட்டரி சங்க பப்ளிக் இமேஜ் தலைவர் முத்து முருகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.