கோவில்பட்டி, சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், முதல்-அமைச்சருடன் சந்திப்பு
![கோவில்பட்டி, சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், முதல்-அமைச்சருடன் சந்திப்பு](https://tn96news.com/wp-content/uploads/2023/07/a7cb9560-45f7-400d-907b-a70e37de9682-850x560.jpeg)
கோவில்பட்டி-தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
சங்கத்தின் தலைவர் பரமசிவம், துணை தலைவர் கோபால்சாமி, சாத்தூர்-தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் த தலைவர் லட்சுமணன், துணை தலைவர் பெருமாள்சாமி, அகில இந்திய தீப்பெட்டி தொழில் கூட்டமைப்பின் தலைவர் நூர்முகமது, குடியாத்தம்- தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/c99c386d-6686-4067-952d-10e7a8934554-1024x682.jpg)
தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி தடை ஆணை பெற்று தந்தமைக்காக நன்றி தெரிவித்து கொண்டனர்,
இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கீதா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)