கவர்னரை பதவி நீக்ககோரி ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்; கோவில்பட்டியில் நடந்தது

 கவர்னரை  பதவி நீக்ககோரி ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்; கோவில்பட்டியில் நடந்தது

மறுமலர்ச்சி தி.மு.க தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நேற்று மாலை, தமிழ்நாடு கவர்னரை பதவி நீக்ககோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் செய்திருந்தார்.

நேற்று மாலை 5 மணியளவில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தூத்துக்குடி வடக்கு  மாவட்ட ம.தி.மு.க சார்பில்    கையெழுத்து இயக்கம் நடந்தது. அவைத் தலைவர் பேச்சிராஜ் தலைமை தாங்கினார்., மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், சொத்துபாதுகாப்பு உறுப்பினர் விநாயகா ஜி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

மாவட்ட, பகுதி கழக, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு இந்திய குடியரசு தலைவரை கேட்டுக்கொள்ளும் ம.தி.மு.க.நடத்தும் கையெழுத்து இயக்கம் என்று குடிப்பிடப்பட்டிருந்த படிவத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் கோரிக்கை குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் விவரம் வருமாறு:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டமன்றத்தின்  செயல்பாடுகளுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுகிறார்.

அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதசார்பின்மைக்கு எதிராக பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுதான் என்கிறார்.

அரசியல் சார்ந்த அதுவும் பா.ஜ.க.அரசியல் சார்ந்த கருத்துகளை பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக்கொண்டுள்ள பதவி பிரமாணத்தை ஆளுநர் ரவி மீறி விட்டார்.

ஆகவே ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் குடியரசு தலைவரை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்த படிவத்தில் ஒவ்வொருவரும் கையெழுத்து போட்டனர். இந்த கையெழுத்து படிவங்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *