மாணவ, மாணவியருக்கான இலவச ஆக்கி பயிற்சி முகாம்
தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் தென்காசி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் யூனிஃபைடு ஆக்கி தென்காசி மாவட்டம் இணைந்து நடத்திய 15 நாள் இலவச சிறப்பு கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் வீரசிகாமணி விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது
முகாம் நிறைவு நாளன்று பங்கு பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இந்த 15 நாள் பயிற்சி முகாமில் உடல் நலனை மேம்படுத்த காலை மாலை இருவேளையும் பயிற்சியின்போது பால் முட்டை மற்றும் சுண்டல் போன்ற உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன மற்றும் ஆக்கி சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
முகாம் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய 17 வது வார்டு கவுன்சிலர் வேலுத்தாய் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார் யூனிஃபைடு ஆக்கி தென்காசி சங்க தலைவர் மற்றும் பள்ளி தாளாளர் முனைவர் கல்யாணி சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினார். தென்காசி யூனிஃபிட் ஆக்கி செயலாளர் முனைவர் பால் மகேஷ் முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி தாளாளர் பிலிம்ஸ், பயிற்சியாளர்கள், முதன்மை உடற்கல்வி ஆசிரியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்