அக்னியில் குளிரும் ஸ்ரீ கழுகாசலமூர்த்தி
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் தமிழகத்தில் ” தென்பழனி” எனப்படும் கழுகாசலமூர்த்தி குடவரைக் கோவிலும் ஒன்றாகும்,
இத்திருத்தலத்தில் முருகன் ஒரு முகத்துடனும், ஆறுதிருக்கரங்களுடனும் மயில் மீது அமர்ந்து ராஜகோலத்தில் காட்சி மேலும் சிறப்பாகும்,
ஸ்ரீ அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டாயுதபாணி சுவாமி,ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்,மற்றும் பலரால் பாடல் பெற்ற ஸ்தலம்
இங்கு கருவறையானது மலையை குடைந்து அங்கு அமையப்பட்டுள்ளது கோடையில் வெயிலின் வெப்பம், மலையினுடைய வெப்பம், தாக்கமும் காணப்படுகிறது, அதனால் கருவறையை சுற்றி இரண்டு அடி உயரத்திற்கு குமார தெப்பத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கருவறையில் நிரப்பப்படுகிறது இதனால் ஸ்ரீ கழுகாசலமூர்த்தி வெப்பத்திலிருந்து விடுபட்டு குளிர்ச்சி அடைகிறார், இதுபோல் வேறு எந்த திருத்தலத்திலும் நடைபெறாத நிகழ்வு ஆகும்
கோடைகால அக்னி நட்சத்திரம் ஆரம்பம் முதல் அக்னி நட்சத்திரம் நிவர்த்தி அடையும் வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது அக்னிநட்சத்திரம் 4-ந்தேதி வியாழக்கிழமை தொடங்கி 29-ந் தேதி முடிவடைகிறது.