கோவில்பட்டியில் தொல்லை கொடுத்த 4 குரங்குகளை பிடித்த வனத்துறையினர்
கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றி வந்தன. இதனால் அலுவலகம் வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் அந்த பகுதியை கடப்பவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர்,
இதனால் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பி.எஸ்.என்..எல். ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்,. இதை தொடர்ந்து கோவில்பட்டி வனச்சரக அலுவலர் பி.பாரதி , வனவர் கே.கேசவன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று கூண்டுகளை அந்த பகுதியில் வைத்தனர். இதில் 4 குரங்குகள் சிக்கிகொன்டன. பின்னர் அந்த கூண்டுகளை குருமலை வனப்பகுதிக்கு கொண்டு சென்று குரங்குகளை வனப்பகுதியில் விட்டனர்.