கோவில்பட்டி பர்னிச்சர் கடை அதிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.65 ஆயிரம் மோசடி
கோவில்பட்டி மற்றும் அருப்புகொட்டையில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் கார்த்திகேயன். கடந்த வாரம் இவருக்கு காஷ்மீரில் இருந்து சாகில் குமார் என்பவர் பேசினார். தன்னை ராணுவ வீரர் என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
ஆன்லைன் மூலம் உங்கள் கடை பற்றி தெரிந்து கொண்டேன். சாத்தூரில் உள்ள நண்பருக்கு கட்டில். மெத்தை சோபா வாங்கி கொடுக்க வேண்டும், நீங்கள் மாடல் அனுப்புங்கள் என்றார்.
உடனே கார்த்திகேயன் வாட்சாப்பில் கட்டில், மெத்தை, சோபா மாடல்கள் அனுப்பி வைத்தார். மறுநாள் அவை பிடித்து இருக்கிறது, விலை எவ்வளவு என்று சாகில் குமார் கேட்டிருக்கிறார்.]
அதற்கு கார்த்திகேயன் ரூ.80ஆயிரம் விலை சொல்லி இருக்கிறார். உடனே சாகில் குமார் ரூ.65 ஆயிரம் முதலில் அனுப்புகிறேன் என்றதும் கடையின் கூகுல்பே கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து அனுப்பினார்.
பின்னர் சாகில்குமார், கூகுல்பே பதிவு செய்யப்பட்ட போன் நம்பரை கேட்டு வாங்கி கூகுள் பே மூலம் இரண்டு தடவை ஒரு ரூபாய் வீதம் அனுப்பினார்.. மூன்றாவதாக ரூ.65 ஆயிரம் அனுப்புவதாக கூறியவர் பணத்துக்கு பதிலாக குறுந்தகவல் ஒன்றை அனுப்பினார்.
அதில் இருந்த லிங்க் ஐ கார்த்திகேயன் ஓபன் செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் அபேஸ் ஆனது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
அதன்பிறகு 30,35,18 ஆயிரத்துக்கான ரிக்குவஸ்ட் லிங்க் குறுந்தகவல் மூலம் வந்தது. அவற்றை கார்த்திகேயன் ஓபன் செய்யாததால் மேலும் பண இழப்பு ஏற்படவில்லை.
இந்த மோசடி பற்றி தூத்துக்குடி சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது.