கோவில்பட்டி:வேகத்தடைகளில் வெள்ளை கோடுகள்- அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தல்
கோவில்பட்டி அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் பி.எஸ்.சுதாகரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருக்கும் மனுவில் கூறி இருப்பதாவது:-
பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் ஆன அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து இயக்கத்தின் கோவில்பட்டி மண்டல் சார்பாக தங்களின் மேலான கவனத்தில் கொண்டு வருவது என்னவென்றால் கோவில்பட்டி நகராட்சி சார்ந்த சாலைகளிலும், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்ந்த சாலைகளிலும் உள்ள வேக தடைகள் பார்த்தால் தெரியும் வகையில் வெள்ளை நிற கோடுகள் பதிவு செய்வது வழக்கம்
ஆனால் கோவில்பட்டி நகரில் உள்ள வேகத்தடைகளில் அது எந்த விதத்திலும் சாலையை பயன்படுத்தும் மக்களுக்கு தெரிகிற வகையில் இல்லை என்பதால் சிறு சிறு விபத்துகள் நடைபெற்று வருகிறது. அதில் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலி ஆகும் முன்பாக தடுத்திட கோருகிறேன். அல்லது நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் ஆன ABGP சார்பில் அதில் வெள்ளை நிற கோடுகள் பதிவு செய்ய அனுமதி அளிக்க கோரிக்கை வைக்கிறேன்.
இன்னும் 15 தினங்களுக்குள் தங்கள் அலுவலகத்தின் சார்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றால் தாங்கள் அனுமதி அளித்ததாக கருதப்பட்டு எங்கள் இயக்கம் சார்பாக கோவில்பட்டி பகுதியில் அந்த பகுதியில் உள்ள மக்கள் உதவியுடன் சாலைகளில் வெள்ளை நிற கோடுகள் பதிவு செய்யப்படும் .
மேலும் இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு பொறுப்பாக தங்களின் பணியில் கவன குறைவு ஆக இருந்த கோவில்பட்டி நகராட்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை கோவில்பட்டி உட்கோட்ட உதவி கோட்டப் பொறியாளர் ஆகியோரில் எந்த சாலையில் விபத்து ஏற்பட்டதோ அந்த அலுவலக பணியாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 & 304 ன் கீழ் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவில் நகல்கள் கோவில்பட்டி நெடுஞ்சாலை துறை உதவி கொட்ட பொறியாளர், நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களில் நேரில் வழங்கபட்டது,.