கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு பேராசிரியை கணவர் பலி
கோவில்பட்டி- குமாரபுரம் ரெயில் நிலையங்கள் இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அனந்தபுரி விரைவு ரயில் லோகோ பைலட் கடம்பூர் ரெயில் நிலைய அதிகாரிக்கு வாக்கி டாக்கி மூலமாக தகவல் கொடுத்தார். அதன் பேரில் தூத்துக்குடி ரெயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் கோவில்பட்டி அண்ணா நகரை மேற்கு மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்த சங்கரப்ப நாயக்கர் மகன் சீனிவாசன் என்று தெரிய வந்தது/
இவர் துபாயில் கார்மென்ட் தொழில் செய்து வந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். கடந்த ஒரு வருடமாக மது போதைக்கு அடிமையாகி சுற்றி வந்தார். இந்த நிலையில் இன்று ரெயிலில் அடிபட்டு இறந்து இருக்கிறார்,
சீனிவாசன் மனைவி. மதுரையில் நர்சிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 21 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். குடும்பத்துடன் மதுரை ஒத்தக்கடை பகுதியில் சிசீனிவாசன் ல வருடங்களாக வசித்து வந்து நிலையில் கோவில்பட்டி இ.பி. காலனியில் வசித்து வரும் தனது அக்காளை பார்ப்பதற்காக வந்தவர் ரெயிலில் அடிபட்டு இறந்து இருக்கிறார்.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.