தென்மண்டல ஆக்கி போட்டி: தமிழக பெண்கள் அணிக்கு கோவில்பட்டி கல்லூரி மாணவி மணிமொழி தேர்வு
தென் மண்டல அளவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ,அந்தமான், நிக்கோபார் அணிகள் பங்கு பெறும் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி ராமநாதபுரத்தில் நடக்கிறது.
இங்குள்ள வேலு மாணிக்கம் செயற்கை இலை ஆக்கி மைதானத்தில் மார்ச் 19 முதல் 28 வரை போட்டிகள் நடக்க உள்ளது
இப் போட்டியில் தமிழக பெண்கள் அணிக்காக விளையாட கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி மாரியம்மாள் கலை கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி A. மணிமொழி தேர்வு பெற்றுள்ளார்
தமிழக பெண்கள் அணிக்காக விளையாட உள்ள வீராங்கனை மணிமொழியை கல்லூரி செயலாளர் கண்ணன்,, முதல்வர் முனைவர் செல்வராஜ் உடற்கல்வி இயக்குனர் சந்திரன், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி மற்றும் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சட்ட ஆலோசகர் பெரியதுரை உள்ளிட்டவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.