மகா சிவராத்திரி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் இன்று இரவு பூஜைகள் நடக்கும் நேரம் விவரம்
மகா சனிபிரதோஷம் சேர்ந்து வரும் அற்புதமான நாள் இந்த வருட மகா சிவராத்திரி நன்நாள்…
சிவராத்திரியும், சனிக்கிழமையும் இணைந்து வரும் 18-2-2023 பகல், இரவு முழுவதும் சாப்பிடாமலும், தூங்காமலும் விரதம் இருந்து, அந்த இரவில் குலதெய்வம் மற்றும் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.
19-2-2023 பகலிலும் தூங்கக்கூடாது. இப்படி தூங்காமல் பூஜை+விரதம் இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்.
அன்றைய தினம் குலதெய்வம் மற்றும் சிவன் கோவில் ஆகிய இரண்டு கோவில்களுக்கும் செல்ல முடியாமல் ஏதேனும் ஒரு கோவிலுக்கு மட்டுமே செல்லமுடியும் என்ற நிலைமை இருந்தால் குலதெய்வக்கோவிலுக்கே முன்னுரிமை தந்து குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடவேண்டும்.
காரணாகமம் என்ற சிவாகம நூலில் சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் 120 வருட சாதாரண தினப் பிரதோஷம் விரதம் இருந்த பலனைத் தரும் என கூறப்பட்டுள்ளது.
தேய்பிறை சனிக்கிழமை சனிமஹா பிரதோஷத்துடன், சனிக்கிழமை வரக்கூடிய மஹா சிவராத்திரியும் கூடியுள்ள இந்த தினத்தில் சிவன் அல்லது குலதெய்வத்தை தரிசிப்பதால், சகல பாவங்களும், தோஷங்களும் விலகும், புண்ணியம் சேரும். ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனியால் வரும் துயரம் சிறிதும் நெருங்காது..
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி_அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில். மகா சனி பிரதோஷம் இன்று மாலையில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதை தொடர்ந்து மகா சிவராத்திரி விழா நான்கு கால பூஜைகள் விடிய விடிய நடக்கிறது.
முதல் கால பூஜை இரவு 9 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து இரண்டாம் கால பூஜை இரவு 12 மணிக்கு நடக்கிறது. மூன்றாம்கால பூஜை
அதிகாலை 2மணிக்குந நடக்கிறது. பின்னர் நான்காம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது.
சுவாமி அம்பாளுக்கு நான்கு கால பூஜைகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.
மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்