ஈரோடு கிழக்கு தொகுதியில் தினமும் தி.மு.க.வினரின் விதிமீறல்கள்; தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் டி.ஜெயக்குமார் புகார்

 ஈரோடு கிழக்கு தொகுதியில் தினமும் தி.மு.க.வினரின் விதிமீறல்கள்; தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் டி.ஜெயக்குமார் புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்­தேர்­தலில் தி.மு.க.வினர் பணப்­பட்டுவாடா செய்­ வ­தாக தமிழக தலை மைத் தேர்­தல் அதிகாரி­ யி­டம் முன்­னாள் அமைச்­சர் ஜெயக்கு­மார் மீண்டும் புகார் மனு கொடுத்­துள்­ளார். இது­ வரை தி.மு.க. சார்­பில் ரூ.35.64 கோடியை செலவழித்­துள்­ள­தாகவும் அவர் புகார் கூறியுள்­ளார்.

ஈரோடு கிழக்கு த�ொகுதி இடைத்­தேர்தல்வருகிற27– ஆம் தேதிநடைபெறுகிறது. ஏற்கனவே ஒரு­முறை இந்த தேர்தல் தொடர்பாக தமி­ழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட் டது.

போலி வாக்காளர் களை அதிகம் சேர்த்துள்ள தாக வும் , அவர்களை வாக்காளர் பட்டிய­லில் இருந்து நீக்க வேண்டும்என் றும் கூறி தமிழக தலைமை தேர்தல்அதிகாரிசத்ய பிரதா சாகு வி டம் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் தலைமை தேர்தல் அதிகாரியை சந்­ தித்து புகார் மனு கொடுத் தார். தேர்தல் விதிகளை தி. மு.க. மீறி வருவதாக­வும், நேர்மையாகவும்,ஜனநாயக முறையிலும் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் தலைமை தேர்தல் அதிகா ரியை கேட்டுக்கொண்டார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்  செய்தியாளர்களிடம் கூறிய­தாவது:-

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்­தேர்தலில் தி.மு.க. தொடர்ந்து விதிமீறல்க­ளில் ஈடுபட்டு வருகிறது. திருமங்கலம் பார்முலா போல ஈரோடு கிழக்கு தொகுதிக்கு புது பார்முலாவை தி.மு.க. உருவாக்கி இருக்கிறது. அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களுக்கு  பொதுமக்களை செல்ல விடாமல் ஆங்காங்கே சாமி­ யான பந்தல்,சேர் போட்டு தினசரி ஆயிரம் ரூபாய் கூலி கொடுத்து மூன்று வேளை பிரியாணி போட்டு அவர்­களை அமரவைத்து விடுகின்­றனர். இதனால் அ. தி.மு.க.கூட்டங்களுக்கு  செல்லும் பொதுமக்களின் கூட்டத்தை தடுக்க சதி வேலை நடை­பெ றுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி­யில் சட்டமன்ற இடைத்தேர்­தல் நடைபெறும் இந்த காலக்கட்டத்தில் தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அண்டை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருக் கும் எஸ்.பி.களை அழைத்து ஆலோ­சனை நடத்­துவது தார்மீக அடிப்படையில் தவறு. ஈரோடு மாவட்டத்தை சுற் றியுள்ள மற்ற மாவட்டங்க ளில் இருந்து கள்ளஓட்டு போட ஆள் இறக்குவது, வாக்காளர்களுக்கு விநியோ கிக்க பணம் சப்ளை செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு  தி.மு.க.வினர் செல்வார்கள். அவர்களுக்கு எந்த இடை­யூ­ றும் செய்­யக்­கூ­டாது என அறி­ வுறுத்­தவே இந்த ஆய்வுக் கூட்­டங்­கள் நடத்­தப்­பட்­டது.

ஆளும் கட்சியை சேர்ந்­த வர்­கள் தி.மு.க. கொடி­ யோடு பிர­சா­ரத்­தில் ஈடு­ பட்டு வருகின்­ற­னர். இயேசு கிறிஸ்­துவின் படத்தை அச்­ச டித்து துண்டு பிர­சு­ர­மாக விநி­ யோ­கித்து வாக்கு சேகரித்து வருகின்­ற­னர். இப்­படி பல்­ வேறு விதிமு­றை­களில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வரு­ கிறார்­கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி­ யில் பஜ்ஜி சுட்­டா­லும், வடை சுட்­டா­லும் தி.மு.க. ஜெயிக்­காது. மக்­கள் மவுனப் பு­ரட்சி நடத்த உள்­ள­னர். இந்த விடியா அர­சுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக் கள் பாடம் புகட்டுவார்­கள். தி.மு.க.வை சேர்ந்த அமைச்­சர், நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பினர்­கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்­கள், ஒன்றிய குழு தலைவர்­கள், நகர்­மன்ற தலைவர்­கள், பேரூ­ராட்சி மன்ற தலைவர்­கள், வாரி­யத் த­லைவர்­கள் என 500–க்கும் மேற்­பட்­டவர்­கள் எந்­த­வித வாகன அனு­ம­தியும்­பெ­றா ம ல் தேர்­த ல் விதிமு­றை­களுக்கு எதி­ராக தங்­கள் வாகனங்­க­ளில் கொடி மற்­றும் கட்சி சின்­னங்­ களை பயன்­ப­டுத்தி வருகி­ றார்­கள்.

ேலும் இவர்­க­ளில் பலர் அரசு முத்­தி­ரை­யு­டன் கூடிய வாகனங்­களை பயன்­ படுத்­தியும் வருகின்­ற­னர். இது தேர்­த ல் விதிமு­றை­களுக்கு புறம்­பா னது. தேர்­தல் அலுவ­ல­கங்­ கள் அமைக்க தி.மு.க.வினர் தேர்­தல் அதிகா­ரிகள் மற்­றும் காவல்து­றை­யினரி­டம் உரிய அனு­ம­தியைபெறவில்லை. தி.மு.க. கூட்­டணி சார்­ பில் இதுவரை ரூ.35.64 கோடி செலவு செய்துள்­ள னர்.

110 செட்டுகள் போட்­ டுள்­ள­னர். ஒரு நாளைக்கு ஒரு செட்டின் வாடகை ரூ.5 ஆயி­ரம் ஆகும். மொத்­தம் 110 செட்டுகளுக்கு 5 லட்­ சத்து 50 ஆயி­ரம் ரூபாய் ஒரு­ நாள் வாட­கை­யா­கும். கடந்த 8–ஆம் தேதி முதல் 13–ஆம் தேதி வரை 6 நாட்­கள் செட்­ டுகளுக்­கான வாடகை ரூ.33 லட்­சம் ஆகும். இந்தசெட்டு­ களில் தலா 400 சேர் போட்­ டுள்­ள­னர். ஒரு சேருக்கு நாள் வாட­கை­யாக ரூ.25 வசூலிக் கப்­ப­டுகிறது. 110 செட்டுகளுக்கு 8–ஆம் தேதி முதல் 13–ஆம் தேதி வரை ரூ.66 லட்­சம் வாட­கை­யா­கும். இதன் மூலம் காங்கி­ரஸ் வேட்­பா­ளர் செட் அமைத் தது பிளாஸ்­டிக் நாற்­கா­லி­ களை வாட­கைக்கு எடுத்­தது மட்டும் ரூ.99 லட்­சம் வரை இதுவரை செல­வழித் துள்­ளார். செட்டுகளில் ஆட்­களை அடைத்­து­வைத்து அசைவ பிரி­யாணி கொடுத்த வகை யில் ரூ.3 கோடியே 96 லட்­ சம் செல­வழித்­துள்­ளார். இது­ போ க சி ற்­று ண் டி , பணப்­பட்டுவாடா என்ற வகை­யிலும் சேர்த்து  மொத்­தம் ரூ.35 கோடியே 64 லட்­சம்­செ­ல­வி­ டப்­பட்டுள்­ளது.

தேர்­தல் நேர்­மை­யா­கவும் ஜனநாயக முறை யிலும் நடை­பெ­றுவதை தேர்­தல் ஆணை­யம் உறுதி செய்ய வேண்டும். இல்லை என்­ றால் நீதி­மன்­றத்தை நாடு­ வோம். தமிழ்­நாட்டில் சட்­ டம் ஒழுங்கு சந்தி சிரிக்­கிறது. நீதி­மன்ற வளா­கம் அருகி­ லேயேகொலை நடக்­கிறது. ஒரே நாளில் 9 கொலைகள் நடந்­துள்­ளன. ஏ.டி.எம். கொள்­ளை­யும் நடந்­துள்­ ளது. தமிழ்­நாடு கொலை, கொள்ளைமாநிலமாக மாறி­விட்டது.

இவ்வாறு முன்னாள்  அமைச்சர் டி.ஜெயக்கு­மார்  கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *