கிணறு தோண்டும்போது வெடிவிபத்து: 3 தொழிலாளர்கள்  பலி

 கிணறு தோண்டும்போது வெடிவிபத்து: 3 தொழிலாளர்கள்  பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ராம்நகர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள புதுப்பட்டி கிராமத்தில் கிணற்று பாசனத்தை வைத்தே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதுப்பட்டி கிராமத்தில் உள்ள இடத்தில் கிணறு தோண்டும் பணி நடந்து வந்தது. இதில், ஆனையப்பப்புரத்தை சேர்ந்த அரவிந்த் மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் ஆகியோர் அங்கு கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கிணறு தோண்டுவதற்காக வெடி வைத்துள்ளனர். இதில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் அப்பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் மற்றும் ஆசீர் சாம்சன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இது பற்றி அறிந்ததும் ஊர் மக்கள் திரண்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்,. அவர்கள் வெடிவிபத்தில் இறந்த 3 தொழிலாளர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.




Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *