• May 20, 2024

கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு ஸ்கேட்டிங் பேரணி

 கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு ஸ்கேட்டிங் பேரணி

கோவில்பட்டியில் தி லிட்டரரி அசோசியேசன் மற்றும் ராஜ் யோகா ஸ்கேட்டிங்  ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் இணைந்து புத்தாண்டை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு ஸ்கேட்டிங் பேரணியை நடத்தினர். 

கோவில்பட்டி   பயணிர் விடுதி முன்பு தொடங்கிய ஸ்கேட்டிங் பேரணி

மாதாங் கோவில் ரோடு வழியாக சென்று புது ரோட்டில் அமைந்துள்ள தி லிட்டரரி அசோசியேஷன் கிளப் முன்பு நிறைவடைந்தது.

சாலை விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கு.நெடுஞ்செழிய பாண்டியன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு   தொடக்கி வைத்தார் . சாலை விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணிக்கு

துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  செயலாளரும் தொழிலதிபருமான எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார்.

எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஏ.மகாலெட்சுமி , சிறப்பு மகப்பேறு நிபுணரும் அனுபாலா இருதயம் மற்றும் மகப்பேறு மருத்துவ மைய மருத்துவருமான எம்.தீபா ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர்  சொக்கலிங்கம், போக்குவரத்து காவலர் இளையராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாலை விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியை சிறப்பித்தனர்  சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு ஸ்கேட்டிங்கில் மாணவ மாணவிகள் சென்று கொண்டே சாலை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் நிகழ்ச்சியில்   ஹலோ எஃப்எம் ஆர்ஜேயும்   ராஜயோக ஸ்கேட்டிங்  ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் மாநில ஆலோசகருமான மணிகண்டன்ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல்,தொழிலதிபர் சடகோபன், ஆகியோர சாலை விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி மாணவ மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாகயோகா ஸ்கேட்டிங் பயிற்சியாளர் மணிகண்டன் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு தமது நன்றி தெரிவித்தார்.

தி லிட்டரரி அசோசியேசன்ஸ் ஸ்போர்ட்ஸ் செயலாளர் வி.ஆர்.ராஜமாணிக்கம்,

ராஜ் யோகா ஸ்கேட்டிங் & ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் நிறுவனர் நாகராஜன் ஆகியோர்  விழாவிற்கான அனைத்து  ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *