• May 20, 2024

கோவில்பட்டி புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில்  பொங்கல்விழா; பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடு

 கோவில்பட்டி புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில்  பொங்கல்விழா; பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடு

கோவில்பட்டி புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதி குடியிருப்போர் நலசங்கம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பலவேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க முடிவு செய்யபப்ட்டுள்ளது., அதன்படி ஜனவரி 15-ந்தேதி  காலை முதல் மாலை வரை போட்டிகள் நடத்தப்படுகின்றன, அதன்பிறகு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது,. விழா முடிவில் அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்படுகிறது.

பொங்கல் அன்று நடைபெறும் போட்டிகள் விவரம் வருமாறு:-

சிறுவர்கள்(5 முதல் 8 வயது வரை)

திருக்குறள் போட்டி

ஓட்டப்பந்தம்- 50 மீட்டர்

ஸ்லோ சைக்கிள் பந்தயம்-50 மீட்டர்

சிறுமியர்கள்(5 முதல் 8 வயது வரை)

திருக்குறள் போட்டி

லெமன் ஸ்பூன்வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது

சிறுவர்கள் (9 முதல் 12 வயது வரை)

திருக்குறள் போட்ட்டி- விளக்க உரை

ஓட்டபந்தயம்- 1௦௦ மீட்டர்

ஸ்லோ சைக்கிள் ரேஸ் – 1௦௦ மீட்டர்

சிறுமியர்கள் (9 முதல் 15 வயது வரை)

கோலபோட்டி

பெண்கள்

கோலபோட்டி

கயிறு இழுத்தல்

வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது

லக்கி கார்னர்

லெமன் ஸ்பூன்

ஆண்கள்

கயிறு இழுத்தல்

லக்கி கார்னர்

பானை உடைத்தல்

 போட்டி விதிகள்

*போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 14 .1.2022 க்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு வரும் போட்டியாளர்கள பெயர் பதிவு செய்யப்படமாட்டாது.

*கோல போட்டிக்கு வருபவர்கள் தங்களுக்கு தேவையான  கோல பொடியை கொண்டு வரவேண்டும்.

*புள்ளி கோலம் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்

*கோல போட்டியில் தனி  ஒருவர்  மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்,.அடுத்தவர்கள், போட்டியாளருக்கு உதவக்கூடாது,போட்டியின் நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே

*சைக்கிள் ரேசில் கலந்து கொள்பவர்கள் சைக்கிள் கொண்டு வரவும். சைக்கிள்  சக்கரத்தில் காற்று முழுமையாக இருக்கவேண்டும்.

போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *