சிவாஜி கணேசன் பற்றி டுவிட்:முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனுக்கு சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
இப்போது அ.தி.மு.கவில் யார் கூட்டும் பொதுக்குழு பெரியது. எந்தக் கூட்டம் ஒரிஜினல், எந்தக் கூட்டம் டூப்ளிகேட்? ஆட்சியிலிருந்தபோது யார் ஊழல்செய்து யார் அதிகம் சம்பாதித்தது போன்ற சண்டைகள்தான் மீடியாக்கள் மட்டுமின்றி, நீதிமன்றங்கள் வரை சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன.
அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்பதால் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், இவர்களின் சச்சரவில் தேவையில்லாமல் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பெயரையும் இழுத்திருப்பதுதான் கண்டிக்கத்தக்கதாகும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் என்பவர் ஒரு டுவிட்டர் பதிவில், ஈ.பி.எஸ் கூட்டிய கூட்டம் எம்.ஜி.ஆர் படம் போல ஓடக்கூடியது என்றும், ஓ.பி.எஸ் கூட்டிய கூட்டம் சிவாஜி படம் போல ஓடாதது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவர் சொல்லுகின்ற அந்தக் கூட்டத்தில்தான் யாரோ ஒரு லட்சம் ரூபாயை பிக்பாக்கெட் அடித்துவிட்டார்களாம். இதுதான் இவர்கள் கூட்டிய கூட்டத்தின் லட்சணம்.
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் – தான் திரையுலகில் கோலோச்சிய காலம் மட்டுமல்ல, மறைந்து 21 ஆண்டுகளாகியும் இன்றும் அவருடைய திரைப்படங்கள் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தமிழகம் அறியும். பதவி சுகத்திற்கும், பணம் சம்பாதிப்பதற்கும், தேவைப்படும்போது மட்டும் எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்தும் இவரைப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் வரலாறு மறந்திருக்கலாம்.
மறைந்த ஒரு தலைவரைப் பற்றி பேசவேண்டாம் என்று இருந்தாலும் வீணாக இவர்களுடைய குழாயடிச்சண்டையில், நடிகர்திலகத்தை இழுத்தால். எம்.ஜி.ஆர் பற்றியும் பல விஷயங்களை நாங்களும் பொதுவெளியில் வெளியிடவேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகிறோம்.
திரு.வைகைச் செல்வன் முதலில், எம்.ஜி.ஆரின் திரையுலக மற்றும் அரசியல் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும் வகையில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய ”எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்” என்ற நூலைப் படித்துத் தெரிந்துகொண்டுவிட்டு, அப்புறம் அவருடைய அதிமேதாவித்தன ஒப்பீடுகளை செய்தால் நல்லது.
இவ்வாறு அறிக்கையில் கே.சந்திரசேகரன் கூறி இருக்கிறார்,.
வைகைசெல்வன் டுவிட்டர் பதிவு விவரம்: