சாத்தூர் அருகே பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் வாகனம் புகுந்தது; 2 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புல்வாய்ப்பட்டி பகுதியில் திருச்செந்தூர் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த சிவகாசி பகுதியை சேர்ந்த இருவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகாசியில் இருந்து நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக 20 பேர் கிளம்பினர். அவர்கள் . இன்று அதிகாலை சாத்தூர் அருகே புல்வாய்பட்டி விலக்கு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தனர்,
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பக்தர்கள் கூட்டத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது, இதில் வயது சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(45),சங்கரன் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் ஆமத்தூரை சேர்ந்த ஜெயராஜ் (46) என்பவர் பலத்த காயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்துபோனவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.