• May 20, 2024

கோவில்பட்டி ஓடை ஆக்கிரமிப்பு: கோவில் முன்பு அமைக்கப்பட்ட நடைமேம்பாலம் இன்று இடிப்பு

 கோவில்பட்டி ஓடை ஆக்கிரமிப்பு: கோவில் முன்பு அமைக்கப்பட்ட நடைமேம்பாலம்   இன்று  இடிப்பு

கோவில்பட்டி மெயின்ரோட்டில் சாலையோரம்  உள்ள நீர்வரத்து ஓடையின் மீது செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகம் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தது. கடைக்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டிடம் கட்டி வியாபாரம் செய்து வந்தனர்,

இந்த ஆக்கிரமிப்பினால் சாலை சுருங்கி போனது. மேலும் ,மலைக்கலங்கலில் தண்ணீர் போக வழியின்றி சாலையில் தேங்கி வந்தது. பல ஆண்டுகளாக இந்த அவல நிலை நீடித்தது/

அரசியல் கட்சியினர் ,ஓடை மீட்பு குழுவினர் மற்றும் பல்வேறு அமைப்பினரின்  போராட்டம் காரணமாக   ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவிட்டது.
இதையடுத்து கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையின் மீது கட்டப்பட்டிருந்த கடைகள் கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் இடித்து அகற்றப்பட்டன.

நீர்வரத்து ஓடையின் மறுபுறம் கோவில்பட்டி வணிக வைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மகேஸ்வரர் சமேத மாலையம்மன் திருக்கோவில் உள்ளது.
இந்தக் கோவில் நிர்வாகம் பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக ஓடையின் மீது தற்காலிக இரும்பு பாலம் அமைத்து இருந்தது. கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி .27-ம் தேதி நடக்க இருப்பதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகம் சார்பில் பிரதான சாலைக்கும் கோவிலுக்கும் இடையே நீர் வரத்து ஓடையின் மீது இருந்த தற்காலிக இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கான்கிரீட் நடைமேம்பாலம் அமைத்து விட்டது,

இதனைக் கண்டித்து நேற்று  காலை நீர்வரத்து ஓடை மீட்பு குழுவினர், செயலாளர் க.தமிழரசன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி  போராட்டம் நடத்தினர். பின்னர் கோட்டாட்சியர்  மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்,.

இதை தொடர்ந்து  கோவில் முன்பு அமைக்கப்பட்ட கான்கிரீட் நடைமேம்பாலத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பற்றி அறிந்ததும்  பாலத்தை அகற்றக்கூடாது என்று அதன்மீது அமர்ந்து கோவிலுக்கு பாத்தியப்பட்ட  சமுதாயத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது. .பஸ் மற்றும் கார்கள் அந்த சாலையில் அனுமதிக்கப்படவில்லை. மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன, பாதுகாப்பு பணியில் ஏராளமான  போலீசார் குவிக்கப்பட்டனர்.

தாசில்தார் சுசீலா, நேரில் வந்து போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் நடை மேம்பாலத்தை அகற்ற தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கான்கிரீட் பாலம் இடிப்பது தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில்    தாசில்தார் சுசிலா, டி..எஸ்..பி.க்கள் லோகேஸ்வரன், சிவசுப்பு , ஆய்வாளர்கள் சுகாதேவி, பத்மாவதி மேற்பார்வையில் நடை மேம்பாலத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது,.

ஜே.சி.பி.இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கான்கிரீட் பாலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது, மறுபடியும் நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு அமையாதவாறு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே நீர்வரத்து ஓடையின் ஒரு பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வசதியாக நடைபாதை அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை மேற்கொண்டுள்ளது. இந்த பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *