கோவில்பட்டி தினசரி சந்தையை இடித்துவிட்டு புதிய கட்டிடம்: தற்காலிகமாக புதிய பஸ் நிலையத்தில் சந்தை செயல்படும்
![கோவில்பட்டி தினசரி சந்தையை இடித்துவிட்டு புதிய கட்டிடம்: தற்காலிகமாக புதிய பஸ் நிலையத்தில் சந்தை செயல்படும்](https://tn96news.com/wp-content/uploads/2022/12/157409cc-a203-4082-a575-b96693f7ac64-850x560.jpg)
கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக ரூ.6.84 செலவில் கட்டிடம் கட்டப்படுவதற்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளபபட்டு வருகிறது;.
எனவே தற்போது தினசரி சந்தையில் மாத வாடகை அடிப்படியில் அனுபவித்துக்கொள்ள உரிமம் பெற்ற குத்தகைதாரர்கள் தாங்கள் கடை உரிமம் பெற்ற கடைக்கு 2022-2023 ம் ஆண்டு முடிய உள்ள வாடகை தொகையை நிலுவையின்றி செலுத்தி 31.12.2022-க்குள் மேற்படி கடையை நகராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்கும்படி தெரிவித்துகொள்ளப்படுகிறது..
தினசரி சந்தையில் தற்போது உரிமம் பெற்றுள்ள குத்தகைதாரருக்கு தினசரி சந்தை கட்டமைப்பு பணி முடிவடையும் வரை தொடர்ந்து வணிகம் செய்வதற்கான மாற்று இடம் ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்கப்படும். ஏற்கனவே கொரோனா காலத்தில்தற்காலிகமாக செயல்பட்ட புதிய பஸ்நிலையத்தின் உள்பகுதியில் சந்தை செயல்படும்.
எனவே அரசு திட்டமான கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உரிய காலத்திற்குள் மேற்படி நகராட்சி சந்தையினை இடித்துவிட்டு புதியதாக கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக 31.12.2022-க்குள் தாங்கள் தங்களால் உரிமம் பெற்ற கடையை நகராட்சி வசம் ஒப்படைப்பு செய்து மேற்படி பணிக்கு ஒதுதுழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது,
மேற்கண்டவாறு நகராட்சி ஆணையாளர் ராஜாராம் கூறி இருக்கிறார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)