தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 36 காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்; பாலாஜி சரவணன் வழங்கினார்

 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 36 காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்; பாலாஜி சரவணன் வழங்கினார்

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் ஆலை எதிர்ப்பு குழுவினர் கடந்த 12.12.2022 அன்று அணி திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க திட்டமிட்டு இருந்த செயலை வடபாக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் ஆலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளரிடம் நேரடியாக சென்று உண்மை கள நில விவரத்தை விவரித்து அணி திரள்வதை தடுத்து எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் பணிபுரிந்த வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர். சேகர்.,

கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25,000/- அபராதமும் பெற்று தந்த கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள், தலைமை காவலர் மயில்கனி மற்றும் காவலர். ஜெபமேரி.,

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், தலைமை காவலர் ஆனந்த அமல்ராஜ், காவலர்கள் சரவணக்குமார் மற்றும் சிவா.,

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த எதிரிகளை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைக்க உதவியாக இருந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள். முத்துராஜா,. அஜீஸ், தனிப்பிரிவு முதல் நிலை காவலர்கள் பாலமுருகன் மற்றும் மகேந்திரன்.,

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த ரவுடியை கைது செய்து வழக்குபதிவு செய்ய உதவியாக இருந்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ், முதல் நிலை காவலர். செல்வக்குமார், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய முதல் நிலை காவலர். மாரியப்பன்].

குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக காரில் கடத்திய வழக்கில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 440 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட 4 எதிரிகளை துரிதமாக செயல்பட்டு சில மணிநேரத்தில் கைது செய்த ஏரல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் . குணசேகரன், சாயர்புரம் காவல் நிலைய முதல் நிலை காவலர். கைலயங்கிரிவாசன், ஏரல் காவல் நிலைய முதல் நிலை காவலர் நாராயணசாமி மற்றும் குரும்பூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர். சந்தோஷ் செல்வம்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தொழில்நுட்ப பிரிவில் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர. திருநாவுக்கரசு மற்றும் காவலர் ஸ்டீபன்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 2022ம் ஆண்டு சி.சி.டி.என்.எஸ் ல் குற்ற வழக்கு விவரங்களை கண்டறிதலில் 570 நபர்களுக்கு குற்ற பிண்ணனி விவரங்களை கண்டறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் விஜயலெட்சுமி

விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 3,000/- அபராதமும் பெற்று தந்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை காவலர். சங்கீதா .

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய வழக்கின் எதிரிக்கு பிடியாணை பிற்பிக்கப்பட்டு 2 ½ ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்த எதிரியை சென்னை சென்று கைது செய்த வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர். ராஜா மற்றும் குளத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர். ஆலோசனை சுரேஷ்/

முறப்பநாடு காவல் நிலையத்தில் நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட வாரண்டுகளில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 73 வாரண்டுகளின் பிடியாணையை நிறைவேற்ற உதவியாக இருந்த முறப்பாநாடு காவல் நிலை முதல் நிலை காவலர்கள் சரவணக்குமார் மற்றும் சதீஷ் தணிகை ராஜா.

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த 2 கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய காவல் ஆய்வாளருக்கு உதவியாக இருந்த சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர்கள் கலைவாணர் மற்றும் பொன்பாண்ட.

கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கின் எதிரிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவரின் சரியான முகவரியை கண்டுபிடித்து அவர் 2020ம் ஆண்டு இறந்த விபரம் விசாரித்து எதிரியின் இறப்பு சான்றிதழை பெற்று வந்து பிடியாணையை நிறைவேற்றி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை முடிக்க உதவியாக இருந்த கொப்பம்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் ஜெயபிரகாஷ் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் கனராஜ்.
கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2021ம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000/- அபராதமும் பெற்று தந்த கழுகுமலை காவல் நிலைய காவலர்  ஜெய்சங்கர். புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புலன் விசாரணையில் இருந்த போக்சோ மற்றும் வரதட்சணை வழக்குகளில் கடந்த அக்டோபர் மாதத்தில் 3 வழக்குகளும், நவம்பர் மாதத்தில் 6 வழக்குகளும் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க சிறப்பாக பணிபுரிந்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலை காவலர்கள் விஜயா மற்றும் செல்வி. முத்துலெட்சுமி

மேற்படி 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 36 காவல்துறையினரின் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும் சிறந்த சேவைக்காகவும்  பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *