• May 21, 2025

டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஞ்சலி ; டி. ஜெயக்குமார் தகவல்

 டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஞ்சலி ; டி. ஜெயக்குமார் தகவல்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-

மக்கள் மனதில் மறையாத,நீக்கமற நிறைந்திருக்கின்ற இன்னும் சொல்லப்போனால் இந்த உலகம் உள்ள அளவு,உலகம் இருக்கின்றவரை ஜெயலலிதாவின் புகழ் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரின் திட்டங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் நினைத்துக்கொண்டே இருக்கின்ற வகையில் மிகப்பெரிய தலைவராக,மிகப்பெரிய அளவுக்குத் தமிழகத்தை வழிநடத்தியவராக,முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு வருகிற 5 ம் தேதி அவரின் நினைவுநாள்.
அந்த நினைவுநாளில் கழக தொண்டர்கள் நம்முடைய கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவு நினைவிடத்தில் கழகத்தின் சார்பிலே அஞ்சலி செலுத்தப்பட்டு அதே இடத்தில் உறுதிமொழி ஏற்கிறோம்.
இதற்கு அனுமதிகோரி சென்னை மாநகர காவல் ஆணையரகத்திலே இன்றைக்கு அது குறித்து கடிதம் அளிக்கப்பட்டது. அது குறித்து அவர்கள் உரியப் பாதுகாப்பும்,உரிய அனுமதியும் அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். புரட்சித்தலைவி அம்மாவுக்கு 5 ம் தேதி தொண்டர்களும்,கழக தோழர்களும்,தலைமைக்கழக நிர்வாகிகளும்,முன்னாள் அமைச்சர்களும்,மற்றும் அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கலந்துகொள்கிறார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்,அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.

கேள்வி : – இன்றைக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை ஒன்று இறந்துள்ளது. இதுபோன்று அரசு மருத்துவமனைகளில் தவறான சிகிச்சை காரணமாகக் குழந்தைகள் இறந்துவருதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறதே.
பதில் : அம்மாவின் ஆட்சிக் காலத்தில் சென்னையைச் சுகாதார தலைநகர் என்று சொல்வார்கள்.அதுபோல தமிழகமும் சுகாதார தலைநகரம். இந்தியாவில் உள்ள அனைவருமே தமிழகத்தில் குறிப்பாகச் சென்னைக்கு வந்து மருத்துவச் சிகிச்சை பெறும் சூழ்நிலை இருந்தது. ஆனால் இந்த விடியா தி.மு.க.அரசு பதவிக்கு வந்த நாள் முதல் மருத்துவத்துறை முழுமையாகக் கவனிப்பாரற்று,கேட்பாரற்று,நிர்வாகத் திறமையில்லாத விடியா அரசில் அமைச்சராக இருந்துகொண்டு,தினந்தோறும் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கின்ற அந்த ஒரு வழக்கமும் முதலமைச்சரோடு நடைப் பயணம் செய்வதுதான் அவருடைய வழக்கமும்,வாடிக்கையாக இருக்கின்றது. அரசு மருத்துவமனையை ஏழை எளிய மக்கள் தேடிவருகிறார்கள். இதே திருவிக நகர் சட்டமன்றத் தொகுதியில் மாணவி பிரியாவுக்கு முட்டியில் இருக்கின்ற ஜவ்வு கிழிந்தது.இது ஒரு சாதாரண விஷயம்தான். மருத்துவத்துறை முன்னேறியுள்ள சூழ்நிலையில் இதற்கு உயிர் போகவேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆனால் உயிரை எடுத்துவிட்டார்கள். இப்படிச் செயல்பட்டால் எப்படி அரசு மருத்துவமனை மீது எப்படி நம்பிக்கை வரும்.
இன்றைக்கு இந்தியாவில் தட்டம்மை வேகமாகப் பரவிவருகிறது.
ஏன் என்றால் கொரோனா காலத்தில் நிறைய பேருக்குத் தட்டம்மை ஊசி போடவில்லை. அதனால் குழந்தைகளுக்கே பாதிப்பு வருகிறது. சென்னை ஐயை கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நிறைய மருத்துவ பிரச்சனை இருக்கின்ற சூழ்நிலையிலே மருத்துவர்களை மிரட்டுவது,பணியிட மாற்றம் செய்வது போன்றவைதான் நடந்துகொண்டுள்ளதே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.எளிய மக்களுக்கு நம்பிக்கை தரவேண்டும். அரசு மருத்துவமனைக்குச் சென்றால் உயிரோடு திரும்பி வருவோம் என்று நம்பிக்கை இருக்கவேண்டும்.இதுபோன்ற தன்னம்பிக்கையை வளர்க்கவேண்டியது அரசின் கடமை. இதில் இந்த விடியா அரசு முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டது.

கேள்வி : இந்தியா முழுவதும் கொரோனா ஜீரோ வாக வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளாரே
பதில் :-கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு மாதமும்,ஒவ்வொரு வாரமும் கூட்டத்தைபோட்டு பல்வேறு நடவடிக்கை எடுத்தார்.அடுத்த கட்டமாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அனைத்தையும் எழுதி வைத்துவிட்டோம். அதனால்தான் இவர்கள் ஓரளவு தப்பித்தார்கள்.கொரோனா பொறுத்தவரையில் அது மேலும் பரவாமல் இருப்பதற்கும்,அது தலைதூக்காமல் இருக்க மக்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இந்த விடியா அரசுக்கு உண்டு.இதையாவது ஒழுங்காகச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி : -டி.டி.வி. தினகரன்,ஓ.பி
எஸ்,,எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகப் பேசப்படுகிறதே

பதில் :,-ஏற்கனவே சொல்லிவிட்டேன்.எனக்கே புளித்துவிட்டது. முடிந்த கதை தொடர்வதில்லை. ஓ.பி.எஸ். கதை முடிந்த கதை.அது தொடர்வதில்லை. மற்றவர்களின் கதையும் முடிந்துவிட்டது.எனவே அதுவும் தொடர்வதில்லை.

கேள்வி :ஓ,பன்னீர்செல்வம் கதை முடிந்துவிட்டது என்று நீங்கள் சொன்னாலும் பாஜக தரப்பில் இருவரும் இணையவேண்டும் என்று தெரிவித்துவருகிறார்களே
பதில் : இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்திவிட்டார்.
ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது பொதுக்குழு.பொதுக்குழுதான் உச்சகட்ட அதிகாரம் கொண்ட அமைப்பு.ஒட்டுமொத்த கட்சி தொண்டர்களின் எண்ணத்தைதான் பொதுக்குழு பிரதிபலிக்கும் அம்மா ஆட்சி வரக்கூடாது என்பதற்காகக் கட்சி விரோத நடக்கையில் ஈடுப்பட்டார்.அவர் மகன் வெற்றிபெறவேண்டும் என்ற காரணத்தினால் அவர் மாவட்டத்தில் இரண்டு தொகுதி போய்விட்டது. அதாவது பெரியகுளமும்,ஆண்டிப்படியும். சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கும்போது ஒரு தொகுதியில் இவர் மட்டும்தான் வெற்றிபெறுகிறார்.மற்ற எந்த தொகுதியும் வெற்றிபெறவில்லையே. அப்படி என்றால் என்ன அர்த்தம்.அம்மாவின் அரசு வரக்கூடாது.அவர் யாருக்கு உதவி செய்கிறார்.மறைமுகமாக திமுகவுக்குதானே உதவி. எவ்வளவோ விஷயங்களை வரிசைப்படுத்தலாம் நாங்கள் கோவிலாக மதிக்கும் அம்மாவின் அறையை அடித்து உடைத்து,ஆவணங்களைக் கொள்ளை அடித்துச் சென்றது,சட்டமன்றத்தில் பாராட்டிப் பேசுவது,அவர் மகன் முதலமைச்சரைப் பாராட்டிப் பேசுவது என்றால் எப்படி தொண்டர் ஏற்றுக்கொள்வான்.

கேள்வி :தண்டையார்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கட்சிக்குத் தலைவராக வேண்டும் என்று பேசப்பட்டுள்ளதே
பதில் : இது அவர்கள் குடும்ப விஷயம் இது. மன்னர் ஆட்சியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.இது மக்களாட்சி கிடையாது.தற்போது உள்ள மூத்த அமைச்சர்களைக் கட்சித் தலைவராக்கும் என்று சொன்னால் ஸ்டாலினுக்குக் கோபம் வரும்.ஆனால் தற்போது அவர் மகனைதான் சொல்லியுள்ளார்கள்.அப்படி என்றால் அவருக்கு ஏன் கோபம் வரப்போகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *