• February 12, 2025

Month: January 2025

செய்திகள்

மதுரை – தூத்துக்குடி ரெயில் திட்டம் : தெற்கு ரெயில்வே விளக்கம்

மதுரை – தூத்துக்குடி இடையே ரெயில்வே வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் மாநில அரசின் கோரிக்கையால், கைவிடப்பட்டதாக ரெயில்வே மந்திரி  அஸ்வினி வைஷ்ணவ், சமீபத்தில் சென்னையில் அளித்த செய்தியாளர் சந்திப்பின் போது  கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இதை தொடர்ந்து மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்டம் தொடர்பான கேள்வியை தவறாக புரிந்துகொண்டு மந்திரி பதிலளித்துவிட்டதால் குழப்பம் நேர்ந்திருப்பதாக தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பான விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- “மதுரை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தாசில்தார் சரவணப்பெருமாள் தலைமையில் தாலுகா அலுவலக ஊழியர்கள் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமகிருஷ்ணன், துணை தாசில்தார்கள் திரவியம், வெள்ளத்துரை, பொன்னம்மாள், ராஜேஸ்வரி மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் […]

ஆன்மிகம்

கல்வியில் முன்னேற ஹயக்ரீவர் வழிபாடு

கல்வியில் முன்னேற நம்முடைய முயற்சி இருந்தாலும், மறுபக்கம் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும். அதற்கு திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும். பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர். மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது. இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள். அதாவது திருமால் தானே தன்னுடைய […]

ஆன்மிகம்

`மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்’- சந்தானத்திற்கு சுந்தர்.சி வேண்டுகோள்

விஷால் மற்றும் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதகஜராஜா’. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்த இப்படத்தில் மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் வெளியானாலும் திரைப்படம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தேசிய பசுமைப் படை மாணவர்கள், வனப்பகுதிகளுக்கு களப்பயணம்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை சார்பில் கோவில்பட்டி கல்வி மாவட்ட  தேசிய பசுமைப்படை மாணவர்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்தில், வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பற்றி அறிய 3 நாட்கள் களப்பயணம் சென்றனர். முதல் நாள்  முண்டந்துறை பயணம் மேற்கொண்டனர். வனச்சரக கூட்ட அரங்கில் ,வனச்சரகர் கல்யாணி, வன காப்பாளர் அசோக்குமார்,கோவில்பட்டி தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் ஆகியோர் களக்காடு […]

சினிமா

துபாய் கார் பந்தயத்தில் வென்ற அஜித்குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

துபாயில் நடந்த 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேசிங்’ அணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித்குமார், இந்திய தேசியக்கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த அஜித் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், அவரது அணி பங்கேற்று வெற்றி பெற்றது. இதையடுத்து திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் அஜித் குமாருக்கு சமூக […]

சினிமா

சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 1-ந் தேதி வெளியாகி உள்ளது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் ‘சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்; பக்தர்கள் குவிந்தனர்

சிவ பெருமானுக்குரிய மிக முக்கிய விரத நாட்களில் ஒன்று மார்கழி மாதத்தில் வரக் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும். இந்த நாளில் ஆடல் அரசனான நடராஜ பெருமானின் தரிசனத்தையும், அருளையும் பெற வேண்டிய அற்புதமான நாள் என்பதால் இதற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர்.  சிவ பெருமானின் நடராஜ ரூபத்திற்கு வருடத்திற்கு 6 முறை மட்டுமே அபிஷேக, ஆராாதனைகள் நடைபெறும். அவற்றில் மகா அபிஷேகம் என சொல்லக் கூடியது மார்கழி மாத திருவாதிரையில் நடைபெறும் அபிஷேகம் […]