கோவில்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
![கோவில்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2025/01/7a006eaa-d986-49a3-afce-3e486b84bfd5-850x560.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/d0434835-4565-46d8-aab1-29ba4c75af54-1024x721.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/37a86ab8-0632-4a88-90ef-2ccabad5a167-1024x512.jpeg)
தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தாசில்தார் சரவணப்பெருமாள் தலைமையில் தாலுகா அலுவலக ஊழியர்கள் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமகிருஷ்ணன், துணை தாசில்தார்கள் திரவியம், வெள்ளத்துரை, பொன்னம்மாள், ராஜேஸ்வரி மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலையில்,நகராட்சி அனைத்து பணியாளர்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. எல்லோருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
கோவில்பட்டி உழவர் சந்தையில் பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் விழா பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. வேளாண்மை துணை இயக்குனர் முருகப்பன் (வேளாண் வணிகம்)சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் இணைச் செயலாளர் பழனிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில்பட்டி உழவர் சந்தை தலைமை நிர்வாகி முத்துக்குமார் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கண்ணன்,மாலதி ஆகியோர் செய்திருந்தனர்.
தொடர்ந்து கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)