• April 19, 2025

Month: September 2024

செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கெஜ்ரிவால் 5 கேள்விகள்

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 22-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு 5 கேள்விகள் விடுத்தார். இந்நிலையில், நேற்று அவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதினார். அதில் மீண்டும் 5 கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுதொடர்பான அந்த கடிதத்தில், “பா.ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என்று பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கூறியது பற்றி என்ன கருதுகிறீர்கள்? 75 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் […]

செய்திகள்

அவதூறு வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை

பாஜக தலைவர் கிரித் சவுமியா  மனைவி டாக்டர் கிரித் மேத்தா என்பவர் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீது அடிப்படை ஆதாரம் இல்லாத முற்றிலும் அவதூறான வகையில், தனக்கும் தனது கணவருக்கும் எதிராக பேசியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக அவதூறு வழக்கும் தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று  இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சஞ்சய் […]

செய்திகள்

செந்தில் பாலாஜி தியாகம் செய்தா சிறைக்கு சென்றார்? சீமான் கேள்வி

செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்துள்ளதற்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் ,செந்தில் பாலாஜியின் தியாகம் பெரியது என்றும் கூறியிருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனங்களை வைத்திருக்கிறார். இது குறித்து சீமான் கூறுகையில்,”:செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டா சிறைக்கு சென்றார். செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால்.. நாட்டுக்காக  தியாகம் செய்து விட்டு சிறைக்கு சென்றவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது? செந்தில் பாலாஜி சிறைக்கு […]

செய்திகள்

15 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக நடந்த  பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய […]

சினிமா

அக்டோபர் 11-ந் தேதி ஓ.டி.டி.யில் `வாழை’ வெளியாகிறது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான திரைப்படம் ‘வாழை’. இந்த படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ‘வெயில்’ படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘வாழை’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அதாவது வாழை தார் ஏற்றி செல்லும் லாரி கவிழ்ந்து அதன் மேல் பயணம் செய்த 19 பேர் […]

சினிமா

குற்றச்சாட்டுக்கு நடிகை பார்வதி நாயர் மறுப்பு

தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி நாயர், சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘தி கோட்’ படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு முன்னணி நடிகையாக இருக்கும் இவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனதாகவும் அதில் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு நுங்கம்பாக்கம் […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா: விரைவுதரிசன கட்டணம் ரூ.1,000 நிர்ணயமா? கோவில் நிர்வாகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறவுள்ள 2.11.2024 முதல் 9.11.2024 வரையிலான 8 தினங்களுக்கு மட்டும் கந்த சஷ்டி திருவிழா விரைவு தரிசன கட்டண சீட்டாக நபர் ஒன்றுக்கு ரூ.1000 என நிர்ணயம் செய்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்படுகிறது என்று கோவில் தக்கார் மற்றும் இணை ஆணையர் பெயரில் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.  இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவ்வாறான தகவல் ஏதும் கோவில் சார்பில் […]

ஆன்மிகம்

இழந்த செல்வத்தை மீட்கும் வாராகி  வழிபாடு

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னி வராகி அம்மன். பஞ்சமி தாய் அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர்கள். 1. பிராம்மி, 2. மகேஸ்வரி, 3. வைஷ்ணவி, 4. கௌமாரி, 5. வராகி, 6. இந்திராணி, 7. சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி அம்மன்தான். மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். […]