Month: August 2024

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குனர் நெல்சன் மனைவியிடம் போலீஸ் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5 ஆம் தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு […]

கோவில்பட்டி

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253-வது நினைவு தினம் நேற்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதை  முன்னிட்டு பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், ஆகியோர் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கனிமொழி பேசுகையில் கூறியதாவது:- […]

செய்திகள்

மத்திய அரசு நிறுவனத்தில் காலி பணியிடங்கள்; விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசி நாள்

மத்திய அரசின் நிறுவனமாக என்பிசிஐஎல் எனும் இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation Of India) செயல்பட்டு வருகிறது.  இதன் தலைமை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதன் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தில் ஸ்டைபென்டியரி டிரெய்னி (ST/TN) ஆபரேட்டர், பராமரிப்பாளர் (Maintainer) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, எலக்ட்ரீசியன், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ், மெஷினிஸ்ட், டர்னர், வெல்டர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வி தகுதி :12ம் வகுப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 25-ந் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி   1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை  இணைந்து   ஒவ்வொரு மாதமும்   நான்காவது  ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. அதன்படி  இந்த மாதத்தின் நான்காவது  ஞாயிற்றுக்கிழமை யான 25 ம் தேதி கோவில்பட்டி   ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை   9 மணி முதல்   மதியம்   2 மணிவரை  நடக்கும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார வேளாண்மை நண்பர்களுக்கான இயற்கை வேளாண்மை குறித்த 5 நாட்கள் பயிற்சி முகாம் தொடங்கியது. வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ப.பாக்கியாத்து சாலிகா குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து, இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த முக்கியத்துவம் மற்றும் விளை பொருட்களுக்கான விற்பனை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். கயத்தாறு வட்டார விதைச்சான்று அலுவலர் திவ்யபாரதி இயற்கை வேளாண்மை மூலம் […]

தூத்துக்குடி

உதயநிதி துணை முதல் அமைச்சர் ஆனால் பெரிய மாற்றம் இருக்காது; மத்திய இணை

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய இணை மந்திரி  எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று  காலை தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-  தூத்துக்குடி மாவட்டத்துக்கு குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவுதளம், துறைமுகத்தை மேம்படுத்துதல் என இந்த அரசு மிக வேகமாக வளர்ச்சி பணிகளை செய்வதில் […]

செய்திகள்

வாஞ்சி மணியாச்சியில் அனைத்து ரெயில்களும்  நின்று செல்லக்கோரி எம் சி.சண்முகையா எம்.எல்.ஏ. மனு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களைச் சார்ந்த வியாபாரிகள் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருந்த ரெயில்கள் அனைத்தும் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் நின்று செல்வதை தென்னக ரெயில்வே  நிறுத்திவிட்டது.. இதனால் சுமார் 75 கிராமங்களை சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.  கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்னர் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் நின்று […]

கோவில்பட்டி

அரசு பள்ளி மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்டந்தோறும் அஸ்ட்ரோ கிளப்புகள் துவக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு வானியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. கோவில்பட்டி வடக்கு திட்டங்களும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள்  குறித்த விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டு தொலைதூரத்தில் உள்ள பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் தலைமை தாங்கினார், […]