கோவில்பட்டியில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார வேளாண்மை நண்பர்களுக்கான இயற்கை வேளாண்மை குறித்த 5 நாட்கள் பயிற்சி முகாம் தொடங்கியது.
வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ப.பாக்கியாத்து சாலிகா குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து, இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த முக்கியத்துவம் மற்றும் விளை பொருட்களுக்கான விற்பனை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
கயத்தாறு வட்டார விதைச்சான்று அலுவலர் திவ்யபாரதி இயற்கை வேளாண்மை மூலம் பெறப்படும் விதைக்கு விதைச்சான்று பெறுதலுக்கான விளக்கங்களை பகிர்ந்து கொண்டார்.
இணைப் பேராசிரியர் எபிநேசர் பாபுராஜன் பயிர் ரகங்கள் தேர்வு செய்தலின் முக்கியத்துவம் குறித்தும், உதவி பேராசிரியர்கள் சஞ்சீவ்குமார், ஆர்த்திராணி இயற்கை வேளாண்மை மற்றும் அங்கக வேளாண்மை குறித்தும் எடுத்துரைத்தனர்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு வேளாண்மை பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. பயிற்சியில், பேராசிரியர்கள் சோலைமலை, குரு மற்றும் ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார சமுதாயவள பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.