தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘விடி18’ என்ற தற்காலிக பெயர் சூட்டப்பட்ட இந்தி சினிமாவை தயாரிக்கிறது.. அதன் படப்பிடிப்பு தொடங்கி இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் ஏ. காளீஸ்வரன் டைரக்ட் செய்யும் இந்த படத்தில் வருண் தவான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் பெண் கதா நாயகியாக நடிக்கிறார். வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், […]
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 72 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:- கோவில்பட்டி மேற்கு சப் இன்ஸ்பெக்டர் குருசாமி ஓட்டப்பிடாரத்துக்கும், நாலாட்டின்புதூர் […]
கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதமாக இலங்கையில் ஒரு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த பவதாரணி நேற்று முன்தினம் இறந்து போனார். அப்போது இளையராஜா இலங்கையில் தான் இருந்தார்,. கொழும்பு மருத்துவமனைக்கு பவதாரணி உடல் கொண்டுசெல்லப்பட்டு உடற்கூராய்வுக்கு பிறகு தனி விமானம் மூலம் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு , பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2024ல் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முன்னெடுப்புகளை மேற் கொண்டமைக்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் “சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக ஆட்சியர் லட்சுமிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கான விருதினை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் நாடு கவர்னர் ஆர்என் ரவி வழங்கினார். ஆட்சியர் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் அந்த விருதினை பெற்றுக்கொண்டார்
இசை அமைப்பாளர் இளையாராஜாவின் மகள் பவதாரணி. 47 வயதான இவர் பின்னணி பாடகி மற்றும் இசை அமைப்பாளர் ஆவார். கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதமாக இலங்கையில் ஒரு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த பவதாரணி உடல்நிலையில் நேற்று திடீர் என பின்னடைவு ஏற்பட்டு இறந்து போனார்.அப்போது இளையராஜா இலங்கையில் தான் இருந்தார்,. மகள் இறந்த செய்தி அவரை துயரத்தில் ஆழ்த்தியது. கொழும்பு மருத்துவமனைக்கு பவதாரணி உடல் கொண்டுசெல்லப்பட்டு உடற்கூராய்வுக்கு பிறகு தனி […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்,சிதம்பராபுரம் கிராமத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, கிராமசபை கூட்டம் நடந்தது, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .மார்கண்டேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார். சிதம்பராபுரம் ஊராட்சியில் மரங்கள் வளர்த்திடவும், சீமை கருவேல மரங்களை அகற்றிடவும் கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி ஜெயந்தி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் […]
இந்தியாவின் 75-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா க்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டன. கோவில்பட்டி கோட்ட அஞ்சலக அலுவலகத்தில் இன்று காலை நடந்த குடியரசு தினவிழாவில் கண்காணிப்பாளார் சுரேஷ் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நாடார் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு நகரசபை துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் […]
40 தொகுதிகளையும் இலக்காக வைத்து நாடாளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. எதிர்கொள்ளும்; முன்னாள் அமைச்சர்
வடசென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கம் மவுன ஊர்வலம் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் கொண்டாடுவதற்கு முழு தகுதி படைத்த இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்..மக்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு குறைவது போல் தெரிந்தால் உடனே தமிழ் மொழியை […]
75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கவர்னர் ஆர்,.என்,.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். முப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் டி,ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி.ஆகியோரை கவர்னருக்கு முதல் அமைச்சர் […]
கோவில்பட்டி மிட் டவுன் அரிமா சங்கத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆளுநர் பிரான்சிஸ் ரவி தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கான 6 கி.மீ. தூர சைக்கிள் போட்டி மற்றும் ஓட்ட பந்தயம் நடத்தப்பட்டது. போட்டிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆளுநர் பிரான்சிஸ் ரவி, போட்டியின் இறுதியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். விழாவில் மிட் டவுன் அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்







