தாய்ப்பாலின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரைஉலக தாய்ப்பால் வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடத்தின் மையக் கருத்து தாய்ப்பால் ஊட்டுதலை செயல்படுத்துதல், பணிபுரியும் பெற்றோர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த உலக தாய்ப்பால் வார விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன் முன்னிலை […]