தீக்குச்சி ஆலை தீவிபத்தில் பலியான பெண் குடும்பத்துக்கு நிவாரண தொகை; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டியில் செயல்பட்டு வந்த அப்பனேரியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊராணி தெருவை சேர்ந்த மாரியம்மாள் (வயது 70) என்ற பெண் உயிரிழந்தார். கனகராஜேஸ்வரி என்பவர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்தில் பலியான மாரியம்மாள் உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், ஆலை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வழங்கினால் மட்டும் தான் உடலை வாங்குவோம் […]