• May 19, 2024

Month: September 2022

செய்திகள்

தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது; ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன், புதுச்சேரியை சேர்ந்த அரவிந்த்ராஜா உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்வு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.தமிழகத்தை […]

செய்திகள்

அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி

அரசு விரைவு பஸ்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன் பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-300 கிலோ மீட்டருக்கு அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. தற்போது இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் […]

செய்திகள்

அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண்

2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், ‘அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்’ என்ற அறிவிப்பும் ஒன்று.இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.698 கோடி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக 1 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது. ‘புதுமைப்பெண் திட்டம்’ என்று பெயர் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு கப்பல்களை பார்த்து பொதுமக்கள் வியப்பு

சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று துறைமுகம் நிர்வாகம் அறிவித்தது.இதை தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்தை பார்வையிட பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வந்து இருந்தனர். மேலும் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.துறைமுகத்தின் நுழைவு பகுதியில் […]

கோவில்பட்டி

அதிகாரிகளுக்கு சாபம்: வேப்பமரத்தில் மனுவை கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, கொடுக்கும் மனுக்கள் காணமால் போகின்றன, பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் புகார் கூறி இந்த போராட்டம் நடைபெற்றதுபின்னர் அலுவலக வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் தங்கள் மனுவை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊழல் அதிகாரிகளை சாபமிடுகிறோம் என்று கோஷம் எழுப்பினார்கள். மேலும் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு நீதி வேண்டும், […]

தூத்துக்குடி

வ.உ.சிதம்பரனார் 151-வது பிறந்தநாள்; ஓட்டப்பிடாரத்தில் உருவசிலைக்கு அமைச்சர் மாலை அணிவிப்பு

சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 151-வது பிறந்த நாள் இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. இல்லத்தில் அமைந்துள்ள திருஉருவ சிலைக்குஅமைச்சர் அனிதா.ஆர்.ராதா கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திநார். பின்னர் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினாஇந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி , மாவட்ட […]

கோவில்பட்டி

வ.உ.சி. பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும்; கோவில்பட்டியில் வசிக்கும் கொள்ளு பேத்தி

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் 151-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.கோவில்பட்டியில் வ.உ.சி.யின் கொள்ளுப்பேத்தி செல்வி அவரது வீட்டில் வ.உ.சி. திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திரைப்பட தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் முருகானந்தம், கபிலாஸ் போஸ், தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி, மாநில பொருளாளர் சுப்பாராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வ.உ.சி.யின் கொள்ளுப்பேத்தி செல்வி செய்தியாளர்களிடம் பேசுகையில் […]

கோவில்பட்டி

காதல் திருமணம் செய்த தம்பதியை அரிவாளால் வெட்டியவருக்கு 2 ஆண்டு ஜெயில்

கோவில்பட்டி அருகே வில்லிசேரி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 29). தொழிலாளி. இவரது சித்தி மகள் பத்திரகாளி (வயது 26). இவர் கடந்த 2013- ஆம் ஆண்டு வேறு சமூகத்தை சேர்ந்தவரான அதே ஊரை ஊரைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமமூர்த்தி (வயது 30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சம்பவத்தன்று வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அய்யனார், பத்திரகாளி வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். தகராறு முற்றியதில் பத்திரகாளியை […]

கோவில்பட்டி

மோட்டார் சைக்கிள் விபத்து; பஸ் டிரைவர் பரிதாப சாவு

கோவில்பட்டி சுபா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). இவர் அரசு போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வேலைக்காக மோட்டார் சைக்கிளில் பணிமனைக்கு புறப்பட்டு சென்றார்.அப்போது திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. நாய் மீது மோதாமல் இருக்க முயற்சித்தபோது, நிலை தடுமாறிய சீனிவாசன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

செய்திகள்

`அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் ஜீரோ’- டி.ஜெயக்குமார்

அ.தி.மு.க.பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியின் பொது கூறியதாவது:- ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் இரண்டு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள். ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட கழக பொதுக்குழு அது சட்டப்படி செல்லும். அதோடு தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்ப்பு என்பது ஆகும்.இந்த தீர்ப்பை தொடர்ந்து ஒவ்வொரு […]