பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள். கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்த வல்லித்தாயாரை) அணைத்துக் கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது. இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். […]
புரட்டாசி மாதம், தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. புரட்டாசியில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள்.புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும், திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் […]
நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராக கோவில் கொண்டருளுகிறார். இக்கோவில் , ரத்தின சபை என்று போற்றப்படுகிறது. சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள். அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது… சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார்? கேட்டாள். அதற்கு பதிலளித்த சிவபெருமான், […]
குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் சிகப்பு நிற குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும். இப்படியான ஒரு நடைமுறை இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும் இதனை செய்கிறார்கள். அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு. ஒரு வயதான பெண்மணி […]
உலகையே உங்கள் பாதங்களால் அளக்கும் பரந்தாமனே! உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள் என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு. மகாபலியின் தியாகம் அந்த பரந்தாமனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆண்டுதோறும் ஒருநாள் மக்களை காண மகாபலிக்கு அனுமதி அளித்தார். ஓணம் பண்டிகை நாளில் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியோடு தங்களை காண வரும் சக்கரவர்த்தி மகாபலியை வரவேற்கின்றனர்! […]
ஒவ்வொரு மனிதன் உடம்பிலும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள்,சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும்.சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது.வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை நமக்கு அளிக்கிறது.இவ்விரண்டு அணுக்களும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது.இதை குறிக்க தான் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் கோவில்களில் சுவர்களில் பூசப்பட்டிருகின்றது.மனித உடலில் உயிர் உண்டாவதை போல இறைவனின் ஆன்மா மூல ஸ்தானத்தில் இருக்கும்.அதனால் தான் அதை கருவறை என்று கூறுகிறார்கள்.சுவர்களில் உள்ள வர்ணங்கள் இவைகளை […]
கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே […]
தெய்வத்திற்கு படைக்கப்படும் முக்கிய அபிஷேக பொருள் தேங்காய்…….!! ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் உண்டு. கண் நரம்பு இல்லாத தேங்காய் கிடைக்காததால், கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு திருமணம் ஆகாமல் நிற்பதாக சாஸ்திரம் கூறுகிறது….. ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும், இரண்டு கண் தேங்காய் லக்சுமியாகவும், மூன்று கண் தேங்காய் சிவனாகவும் &
ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவார்கள். இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் அனுமார். அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார்.முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்த பின் அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தை பார்த்தபோது அங்கு குங்குமத்திற்கு பதில் செந்தூரம் இருந்ததை கண்டார். அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது”என அனுமான் கேட்க, அதற்கு சீதாபிராட்டி, […]
கோயிலுக்கு செல்லும் போது… 1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 2.வெறும் கையுடன் கோயிலுக்கு போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும். 3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்ல கூடாது. 4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலைமுடியை விரித்து போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது. 5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட வேண்டும். 6. பெண்கள் தங்கள் […]
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022