சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்- சிம்மத்தின் மீது அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி  

 சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்- சிம்மத்தின் மீது அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி  

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 50கி.மீ தொலைவில் சிறுவாச்சூர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது.

இத்தலத்தில் மிகப் புகழ்பெற்ற நேர்த்திக்கடன் என்றால் அது மாவிளக்கு நேர்த்திக்கடன் என்பதாகும். வெளியில் எங்கும் மாவிளக்கு மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள் அரிசி கொண்டுவந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு மாவு தயார் செய்கிறார்கள்.

பின்பு அதனுடன் நெய்விளக்கு ஏற்றித் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்காக மாவு இடிக்கத் தனியிடம் ஒதுக்கப்பட்டு உரல்களும், #உலக்கைகளும் ஆலயம் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளன.

இடிக்க முடியாத பக்தர்களுக்கு கூலிக்கு மாவு இடித்துத்தர பணியாளர்களும் உள்ளனர். மதுரைக் காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாகக் கூறுகிறார்கள்.

அம்மன் சுமார் 4 அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். வடக்கு நோக்கிய சன்னதியில் அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்யபாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம்.

திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சியில்லை. அருளும் நிலையிலேயே காட்சி அளிக்கிறார்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *