கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை; கோரிக்கை மனு
![கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை; கோரிக்கை மனு](https://tn96news.com/wp-content/uploads/2022/09/pic-850x560.jpg)
தூத்துக்குடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு சுதந்திர போராட்ட தியாகிகள், எழுத்தாளர் உள்ளிட்ட பலருக்கு, அவர்களை நினைவு கூறும் வகையிலும், வருங்கால சந்ததியினருக்கு தெரிவிக்கும் வகையிலும் பல இடங்களில் மணிமண்டபங்கள், சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு கோவில்பட்டியில் சிலை அமைத்து, அரசு விழா நடத்த வேண்டும்
கோவில்பட்டியில் நேதாஜியின் பெயரில் செயல்பட்டு வந்த ஆட்டுச்சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அக்டோபர் மாதம் 1-ந் தேதி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பிருந்து சென்னை வரை சைக்கிளில் சென்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்படும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)