கோவில்பட்டியில் 3 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
![கோவில்பட்டியில் 3 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்](https://tn96news.com/wp-content/uploads/2022/09/69fbb568-45e2-4021-b120-c50c945366f0-850x560.jpg)
தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
மற்ற மாவட்டங்களில் இன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 56 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 8 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி பங்களாதெருவில் உள்ள நகராட்சி ஆரம்ப பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி தொடங்கி வைத்தார்.நகராட்சி ஆணையர் ராஜாராம், நகராட்சி ஊழியர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பள்ளி கல்வி துறையினர் கலந்து கொண்டனர் .
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் பங்களா தெரு, நகராட்சி ஆரம்ப பள்ளி, ஸ்டாலின் காலனி நகராட்சி ஆரம்பப்பள்ளி, காந்திநகர் நகராட்சி ஆரம்பப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)